பக்கம் எண் :

63
 
பண்டைச் சேர மரபு
 
     சங்க மரபின்படி முதற் சங்கத்துக்கும், புராணமரபின்படி பாரத காலத்துக்கும்
உரியமிகப் பழங்காலச் சேரன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், பாரதப் போரில்
இருக்கிற வீரர்களுக்கும் பெருஞ்சோறு வழங்கியதாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற
முதற்சங்கப் புலவர் (புறம் 2,) அவனைப் பாடியுள்ளார். வேறு இருசங்கப் பாடல்கள்
(அகம் 65, 233) இச்செய்தியைக் குறிப்பிடுகின்றன.
 
     கிட்டத்தட்டச் சேர அரசர்களின் ஒரு வரலாறாக இயங்குவது பதிற்றுப்பத்து,
அதன்முதல் பத்தும் கடைசிப் பத்தும் நமக்குக் கிட்டவில்லை. ஆனால் இரண்டாம்
பத்து,கடைச் சங்கத்தின் மிகப் பழைய அரசனாக உதியஞ்சேரலைக் குறிக்கிறது.
 
     சேர அரசர் குடியுரிமை இக்காலக் கொச்சி அரசர் உரிமை போன்றது. குடியின்
மூத்த ஆணே அரசனானான். எனவே ஒரே சமயம் வயதுவந்த அனைவரும் அரசுரிமை
பெற்றனர். இக்காரணத்தால் சேர அரசரை மரபு வரிசைப் படுத்துவது கூட
அரிதாகின்றது.
 
     உதியஞ் சேரலையடுத்து அவன் மூத்த புதல்வன் இமய வரம்பன்
நெடுஞ்சேரலாதனும், அவன் இளவல் பல்யானை செல்கெழுகுட்டுவனும் ஆண்டனர்.
அதன்பின் அவன் இளைய புதல்வர் இரண்டாம் ஆதன் அல்லது முடிச்சேரலாதனும்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆண்டனர்.
 
     இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் கி.பி. 50 வரை 58 ஆண்டுகள் ஆண்டான்.
மற்ற இரு அரசரையும் ஐந்து வேளிர்களையும் அடக்கியதற்கு அடையாளமாக அவன்
ஏழு முடிமாலை அணிந்திருந்தான். சேரரது விற்பொறியை அவன் இமயத்தில்
பொறித்தான். அவன் கடற் கொள்ளைக்காரரை அவர்கள் இருந்த தீவு வரைச்சென்று
அழித்து, மேல்கடற் கரையின்