பக்கம் எண் :

ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை

"ஏன் நடுங்குகிறாய்?" என்று பார்ப்பான் கேட்டான். ரோஜாப் பூ அங்கிருந்து விரைவாக மறைந்தோடி விட்டது. இவ்விதமாக ரோஜாப் பூ யாரை மயக்கி வசப்படுத்திக் கொள்ள விரும்பினாலும் ஒரு பயம் நேரிட்டுக் கொண்டேயிருந்தது. கடைசியாக அவளுக்கு (அந்தப் பாம்புப் பெண்ணுக்கு) "கர்த்தப ஸ்வாமிகள்? என்றொரு ஸந்நியாசி வசப்பட்டான்.

இவ்வாறு மதுகண்டிகை என்னு குயில் சொல்லி வருகையில் ரஸிக சிரோமணி, "அந்த ஸந்நியாசி யார்?" என்று கேட்டது.