பக்கம் எண் :

கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது

வந்து சேர்ந்தேன். அம்மன் சன்னிதித் தெருவிலே இறங்கியிருக்கிறேன். இந்த ஊரில் தாங்கள் பெரிய பக்திமானென்றும், யோகி யென்றும், ஞானி யென்றும் கேள்விப்பட்டேன். தங்களிடம் வந்து ஆத்மா கடைத்தேறும் படியான மந்திரோபதேசம் பெற்றுக் கொண்டு போகலாமென்ற கருத்துடன் வந்தேன்" என்றாள். சாமியாருக்கு உச்சந் தலையிலே பூமாரி பொழிந்தது போல், உடம்பெல்லாம் புளகமாய்விட்டது. சிங்கள தேசத்து ராஜன் மகள் சீடப் பெண்ணாக வந்தால் யாருக்குத்தான் ஆனந்தமேற்படாது?

"இப்போதே மந்திரோபதேசம் பண்ணட்டுமா?" என்று சாமியார் கேட்டார். அவசரம் வாரிக் கொண்டு போகிறது அவருக்கு!

அதற்கு ரோஜா சொல்லுகிறாள்;-

"நல்ல நாள், நல்ல லக்னம் பார்த்துச் செய்ய வேண்டும். மேலும், குருவுக்குப் பாதகாணிக்கை வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; நாள் பார்த்துச் சொல்லுங்கள்" என்றாள். சாமியாருடைய சந்தோஷம் கரை கடந்து விட்டது. சாமியார் சோதிடம் பார்க்கிறார்:-

இன்றைக்கு என்ன கிழமை? ஞாயிற்றுக் கிழமை. நாளைக்குத் திங்கட்கிழமை, ஸோமவாரம், நல்ல நாள். காலையிலே ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரைக்கும் ராகுகாலம்; அது முடிந்தவுடனே நல்ல லக்னம் வருகிறது. செவ்வாய் மிதுன ராசியிலே பிரவேசிக்கிறான். அவனைக் குரு பார்க்கிறான். அப்போது மந்திரம் கூறுவதற்குப் பொருத்தமான வேளை. 'சுபயோக-சுபகரண-ஏவங்குண-விசேஷண-விசிஷ்டாயாம்' என்று சாஸ்திரம் முறையிடுகிறது. நம்முடைய மந்திரமோ வைரவ மந்திரம். எல்லாவிதமான தேவநாமங்களும் வைரவ நாமத்துக்குள் அடங்குமென்பதற்குச் சூடாமணி நிகண்டிலே தக்க ஆதாரமிருக்கிறது. 'முத்தனே, குமாரன்' பிள்ளை என்று நிகண்டுக்காரர