பக்கம் எண் :

கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது

என்றது. அப்போது, ரஸிகசிரோமணி, "இக் கதையை எதன் பொருட்டாகச் சொன்னாய்?" என்று கேட்டது.

குயில் -

"உங்கள் ஜாதிக்கே பிறர் வார்த்தையை எளிதாக நம்பி மதிமோசம் போவது வழக்க மென்பதைக் காட்டும் பொருட்டாகச் சொன்னேன். ஆனால் நீ அப்படியில்லை. நீ கழுதையாக இருந்தாலும் புத்திசாலிதான்; நியாயத்தைச் சொன்னால் கட்டுப்படுகிறாய். தஞ்சாவூர் தட்டிக்கொண்டான் செட்டி கதையை மேலே சொல்லு" என்று வேண்டிற்று.