ஆ.ஸ். - அது இலக்கணப்படி. நான் வேதாந்த அர்த்தம் சொல்லுகிறேன். த.கொ.செ. - சரிதான், சரிதான். மேலே உத்தரவாகட்டும். ஆ.ஸ். - மழைநாளில் மாத்திரம் ஸந்நியாசி ஒரே இடத்தில் தங்கலாம். ஆகாசமே மேற்கூரை; பூமி கட்டில், மெத்தை. வெளியில் பனியெல்லாம் சந்தனம், பனிநீர். கவிராயரே கவனிக்கிறீர்களா? க.கா.க - சன்னிதானத்தின் மீது ஒரு ஆசுகவி இயற்றுகிறேன், இயற்றி யாயிற்று, இதோ உரைக்கிறேன். |