பக்கம் எண் :

முதற் பகுதி - வெண்பா

"உலகைத் துறந்தீர் உருவைத் துறந்தீர், மலையைப் பிளந்துவிட வல்லீர் - இலகுபுகழ் ஞானம் தவம் கல்வி நான்குந் துறக்கிலீர், ஆனந்த மையாஹரீ."

ஆ.ஸ். -

ஹரி நாமத்தை உரைத்தீர்கள். ஆனந்தம். ஆனந்தம்.

த.கொ.செ. -

சந்தேகமென்ன? தெய்வபக்தி தானே மனுஷனுக்கு முக்கியமாக இருக்கவேண்டும்.

ஆ.ஸ். -

இந்த ஆசு கவியைக் கவிராயர் இந்த சரீரத்தை நோக்கிச் சொன்னார். ஆனாலும் நமக்குள்ளே விளங்கும் பரமாத்மா கேட்டு மகிழ்வடைந்தான்.

இப்படிப் பலவிதமாக நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, கவிராயர் மற்றொரு சமயம் வருகிறேன் என்று சொல்லி எழுந்து போய்விட்டார். போகும் போது கவிராயர் மனதில் இந்தச் சாமியார் திருடன் என்று சொல்லிக்கொண்டு போனார். கவிராயர் போனவுடன் ஸந்நியாசி சொல்லுகிறான்:-