செட்டி - "தெய்வமே துணை" என்றான். சாமியார் - "குருவுந் துணை" என்றார். செட்டி - "எனக்கு நான்மை கிடைக்குமா?" சாமி - "கிடைக்கும்." செட்டி - "என் துக்கம் தீருமா?" சாமி - "தீரும்." செட்டி - "கணக்கு என் கைக்குத் திரும்பி வந்தால் நான் எந்தத் தருமத்துக்கும் அவ்விடத்தில் கட்டுப்பட்டிருப்பேன்." சாமி - "செட்டியாரே, செட்டியாரே, நமக்கு நீ எவ்விதமான தர்மமும் செய்ய வேண்டாம். உம்முடைய கடமையை நேரே கவனித்தால் அதுவே போதும் செட்டி - "என் கடமை யாது?" சாமி - இப்போது ஒரு ஸூத்ரம் மாதிரியாகச் சொல்லி விட்டுப் போகிறேன். திருவாரூருக்குப் போய் திரும்பி வந்தவுடனே அதை விளக்கிச் சொல்லுகிறேன். அதற்கு முந்தி உமக்கே பொருள் விளங்கினாலும் விளங்கிப் போகும் அந்த ஸூத்ரம் எப்படி என்றால்:- |