பக்கம் எண் :

முதற் பகுதி - மயேமஏ

இவ்வளவுதான். இது கிரந்தம். எழுதி வைத்துக்கொள்ளும்.

செட்டி அப்படியே ஒரு ஓலை நறுக்கில் எழுதி வைத்துக்கொண்டான்.

இரண்டு வாரங்களுக் கப்பால் தஞ்சாவூர்த் தட்டிக் கொண்டான் செட்டிக்குப் பின்வருமாறு ஒரு காகிதம் வந்தது.

மதுரையில் ஆரூட ஸ்வாமி தஞ்சை த.கொ. செட்டியாருக்கு ஆசீர்வாதம்.

நான் தங்களிடம் சொல்லிய ஸூத்திரத்துக்குத் தாத்பர்யம் என்னவென்றால்,

"மற்றவனை யேமாற்றியவனை மற்றவன் ஏமாற்றுவான்"

ரஸிக சிரோமணி என்ற கழுதை சொல்லுகிறது:

"தட்டிக்கொண்டான் செட்டி மதுரை மாணிக்கஞ் செட்டியின் காலிலே போய் விழுந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டான். நஷ்டத் தொகையில் பாதி பெற்றுக் கொண்டு மாணிக்கஞ் செட்டி தனது மைத்துனனை மன்னித்து விட்டான். அவனுடைய இடத்தில் தனது தஞ்சாவூர் காரியஸ்தனாக மானி அய்யனையே நியமனம் செய்தான். ஆரம்பத்தில் மானி அய்யனை உபயோக மில்லாதவனென்றெண்ணி நகத்தது மடமை யென்பதை மாணிக்கஞ் செட்டி தெரிந்துகொண்டு தனக்குப் பார்ப்பான் செய்த உபகாரத்தையும் அவனுடைய திறமையையும் வியந்து அவனுக்குப் பலவிதமான ஸன்மானங்கள் செய்தான். அது போலவே, ஓ, கருவம் பிடித்த மதுகண்டிகை யென்ற குயிற் பெண்ணே, நீ இப்போது என்னை நகைக்கிறாய். இன்னும் சிறிது காலத்துக்கப்பால் என்னுடைய திறமையைக் கண்டு நீயே ஆச்சரியப்படுவாய்" என்றது.