பக்கம் எண் :

மயேமஏ

அதற்கு விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: -

"இதுவரை சொன்ன பகுதி 'பயனறிதல்' எனப்படும். இனிமேலே சொல்லப் போகிற பகுதிக்கு 'நம்பிக்கை' என்று பெயர். உங்களுடைய வினாவிற்கு விடை கதை மூலமாகச் சொல்லாமல் நேரே சொல்லி விடுகிறேன். மூடனுக்குச் சங்கட முண்டாக்கி வேடிக்கை பார்ப்பவன் பாவி. அவனுக்கு இந்த ஜன்மத்தில் பலவிதமான தீங்குகள் விளையும். விவேகமில்லாதவன் கூட தெய்வபக்தி செய்வதனால் அவனுக்கு நன்மை ஏற்படாமல் போய்விடாது. ஆரம்பத்திலே பலவித இடையூறுகளுண்டாய், அவற்றிலிருந்து கடைசியாக விவேகம் உண்டாகும், பிறகு தெய்வபக்தி மேன்மையான பயன்களைத் தரும்" என்றார்.