பக்கம் எண் :

திண்ணன் என்ற மறவன் கதை

துரத்திவிட்டான். பிறகு திண்ணன் மீனாக்ஷியம்மன் கோயிலில் பூஜைசெய்யும் குருக்கள் ஒருவரிடம் போய்க் கேட்டான். அந்தக் குருக்களென்ன செய்தார்? "அப்பா! நீ இன்னும் ஒரு வருஷம் கழிந்த பிறகு என்னிடம் வந்து இதைக் கேள். அப்போது மறுமொழி சொல்லுகிறேன். அதுவரை சொல்ல முடியாது" என்று போக்குச் சொல்லி அனுப்பி விட்டார். பிறகு திண்ணன் ஒரு மந்திரவாதியிடம் போய்க் கேட்டான். அந்த மந்திரவாதி சொல்லுகிறான்: - "தம்பி, பதினாறு பொன் கொண்டுவந்து கொடு. நான் ஒரு பூஜை நடத்தி முடித்து உன்னுடைய மனோரதம் நிறைவேறும்படி செய்விக்கிறேன்" என்றான்.

திண்ணன் திரும்பிப் போய்விட்டான். அவனிடம் பதினாறு வெள்ளிக் காசுகூடக் கிடையாது. அவன் ஏழைப்பிள்ளை. இதன் பிறகு 'யாரைப் போய்க் கேட்கலா'மென்று யோசனை செய்து பார்த்தான். "நேரே, ராஜாவின் மகளையே கேட்டு விட்டாலென்ன?" என்று அவன் புத்தியில் ஒரு யோசனை யேற்பட்டது. "சரி. அப்படியே செய்வோம்" என்று தீர்மானம் பண்ணிக்கொண்டான். அவனுக்குப் பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பூவாணிச்சியின் மகள் நாள்தோறும் அரண்மனைக்கு மாலை கட்டிக் கொண்டு கொடுத்து வருவது வழக்கம். அந்தப் பெண் திண்ணனுக்கு நெடுநாளாகப் பழக்கமுண்டு. இவன் என்ன சொன்ன போதிலும் அந்தப் பெண் கேட்பாள். ஆதலால், இவன் ஒரு சிறிய நறுக்கோலையில்,