பக்கம் எண் :

சூனியக் குகையில் மந்திராலோசனை

"கோள் வார்த்தை ஏதேனும் தண்டிராஜன் செவியில் எட்டுவதாக இருந்தால் உனக்கு உயிர்ச் சேதம் நேரிடும்" என்றேன். 'தக்ஷிணை, தக்ஷிணை'யென்று முணுமுணுத்தான்.

"நானும் தண்டிராஜனும் தனியிடத்தே பேசும்படி நீ செய்வித்தவுடன் உனக்குத் தந்ததில் மும்மடங்கு தரப்படும்" என்றேன்.

இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கையிலே திடீரென்று ஏதோ யோசனை பண்ணி என்னை மூச்சைப் பிடித்துக் கொல்லத் தொடங்கினான். நான் அவனுடைய அடி வயிற்றிலே எனது பிடிவாளை மூன்றங்குல ஆழம் அழுத்தினேன். கோவென்று கூவிக் கைகளை நெகிழ்த்துக் கொண்டான். நானும் வாளை உருவிக் கொண்டேன்.

உடனே மண்ணைப் பிறாண்டி வயிற்றிலே திணித்து இரத்த மொழுகாதபடி அடைத்துக் கொண்டு, என்னிடம் திரும்பி வந்து.

"இதென்ன தம்பி? முத்தமிட வந்தால் அடி வயிற்றில் வாளைக் கொண்டு குத்தினீரே? நியாயமா?" என்று கேட்டான்.

"கை தெரியாமல் பட்டுவிட்டது. மூன்று லக்ஷத்து முப்பது தரம் மன்னித்துக் கொள்ளவேண்டும்" என்றேன்.

அன்றிரவு மந்திராலோசனையை இவ்வளவுடன் நிறுத்திக் கொண்டு குடியன் கோயிலுக்கருகே கரடிச் சாத்தானுடைய யாக சாலைக்குத் திரும்பி வந்து சேர்ந்தோம். மறுநாள் பொழுது விடிந்தது.