பக்கம் எண் :

ஞானரதம் - பந்தாட்டம்

ஓர் மேடையின் மீது கந்தர்வக் குழந்தைகள் பூப்பந்தாடிக் கொண்டிருந்தன. ரோஜாப் பூப் பந்துகள்.

ஒரு சிறுவன் "அடீ ரஸிகே! நீ பந்தை எறியும் போதெல்லாம் என் கைக்கோலுக்கு அகப்படாமல், வேண்டுமென்று, கோணலாக, என் முகத்தைப் பார்த்து எறிகிறாய். இனி நான் உன்னோடு விளையாட மாட்டேன்" என்றான். இது கேட்டு மற்றக் குழந்தைகளெல்லாம் கலீரென்று நகைத்தார்கள். எல்லாக் குழந்தைகளும் இவ்வாறு ஒன்று சேர்ந்து பல வார்த்தைகள் பேசியும், ஒருவர் மேல் ஒருவர் மோதியும், ஆடியும், பாடியும், சிரித்தும் விளையாடிக்கொண்டிருக்க, அவன் மட்டும் ஓர் ரோஜா நிறங்கொண்ட பளிங்காசனத்தின் மீது தனியே சாய்ந்திருந்து கொண்டு, பாதி குவிந்த விழிகளோடு ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் பர்வதகுமாரியை நோக்கி, "அதோ, விலகி உட்கார்ந்திருக்கிறானே, அந்தப் பையன் யார்?" என்று கேட்டேன்.