இலை போட்டு ஜலந்தெளித்துப் பரிமாறுதல் தொடங்கி விட்டது. நாலு இலை குழந்தைக் கொன்று; விசாலாட்சிக் கொன்று; பந்துலுவுக்கொன்று; கோபாலய்யங்காருக் கொன்று. பந்துலுவின் மனைவி பரிமாறுகிறாள். பந்துலுவும் கோபாலய்யங்காரும் வந்து முதலாவது உட்கார்ந்தார்கள். சிறிது நேரத்துக் கெல்லாம் விசாலாட்சியும் குழந்தையும் வந்து உட்கார்ந்தனர். போஜனம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறிதுநேரம் கழிந்தவுடனே கோபாலய்யங்கார் விசாலாட்சியை நோக்கி:- "விசாலாட்சி எங்கே?" என்று கேட்டார். இவள் தான் விசாலாட்சி யென்பது அவருக்குத் தெரியாது. பணிப் பெண்ணையும் குழந்தையையும் ஒன்றாக நோக்கியது முதலாக அப் பணிப் பெண்ணே விசாலாட்சி என்ற பிராந்தியில் அவர் மயங்கி யிருந்தார். "நான்தான் விசாலாட்சி" என்றாள் விசாலாட்சி: "நீயா விசாலாட்சி?" என்றார் கோபாலய்யங்கார். "ஆம்" என்றாள் விசாலாட்சி. "காலையில் இக் குழந்தையுடன் சோலையில் விளையாடிக் கொண்டிருந்த பெண் யார்?" என்று கோபாலய்யங்கார் கேட்டார். "அவள் இக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கவில்லை. இந்தக் காவல் குழந்தைக்குக் காத்துக் கொண்டிருந்தாள். அவள் பந்துலு வீட்டு வேலைக்காரி" என்று விசாலாட்சி சொன்னாள். கோபாலய்யங்காருக்கு நெஞ்சுக்குள் ஒரு பேரிடி விழுந்தது போலாயிற்று. காலையில் பூஞ்சோலையில் வேலைக்காரி சந்திரிகையை முத்தமிட்டபோது அச்செய்கையை இருவர் பார்த்ததாகவும் அவ்விருவருள் ஒருவர் அந்த வேலைக்காரியின் மீது காதல் கொண்டனரென்றும் |