பக்கம் எண் :

விசாலாக்ஷிக்கு நேர்ந்த சங்கடங்கள்

அதற்கு விசாலாக்ஷி:- "என் அம்மாங்காருடைய மாமன் மகளுக்கு அம்மங்கார் என்றும், அத்தை மகளுக்கு அத்தங்கார் என்றும் பிராமணர்களுக்குள்ளே பெயர்கள் வழங்கி வருகின்றன, சிலருக்கு ஒருவேளை இச்சொற்கள் தெரியாமலிருக்கக் கூடுமாதலால் அவற்றை இங்கு விளக்கிக் கூறினேன் புருஷன் மயிலாப்பூரில் லஸ் சர்ச் ரஸ்தாவிலிருக்கிறார். அவருடைய பெயர் சோமநாதய்யர். ஆனால் அவரும் என் அம்மாங்காரும் அவர் வீட்டிலிருக்கும் அவருடைய தாயாரும் மிகவும் வைதிக நம்பிக்கைகளுடையவர்கள். நான் மறுபடி விவாகம் செய்துகொள்வதில் அவர்களுக்குச் சம்மதம் இராது. விவாகம் நடந்து முடியும்வரை, நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேனென்ற விஷயத்தை என் பந்துக்களுக்கு அநாவசியமாகத் தெரிவிப்பதில் எனக்குச் சம்மதமில்லை. ஆதலால், தாங்கள் நான் இருக்குமிடத்துக்கு ஆளேனும் கடிதமேனும் அனுப்ப வேண்டியதில்லை. இன்ன தேதியன்று நான் இங்கு வரவேண்டுமென்று இப்பொழுதே சொல்லிவிடுங்கள், அந்தத் தேதியில் நான் இங்கு வருகிறேன். அதற்கிடையே என்னை மறந்துபோய் விடாமல் என் காரியத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருங்கள்" என்றாள்.

அப்போது பந்துலு, "நான் உன்னை மறக்கவே மாட்டேன். உன் விவாகம் நடப்பதற்குரிய யோசனை என் புத்தியில் அகலாதே நிற்கும். நீ அதைக் குறித்துக் கவலைப்பட வேண்டா. ஜனவரி மாசம் இருபதாந்தேதி நான் இங்கிருந்து ராஜமகேந்திரபுரத்துக்குப் புறப்படப் போகிறேன். நீ ஜனவரி மாசம் பதினெட்டாந் தேதி இங்கு வா" என்றார்.

இது கேட்டு விசாலாக்ஷி:- "தாங்கள் இந்த ஊரிலிருக்கும் போதே எனக்கொரு வரன் தேடிக் கொடுக்க முயற்சி பண்ணுவதே உசிதமென்று நினைக்கிறேன். இது ராஜதானிப் பட்டணம். இங்கு கிடைக்காத வரன் ஒதுக்கமான கோதாவரிக் கரையில் எங்ஙனம் கிடைக்கப் போகிறான்?" என்றாள்.