சிறிது நேரத்திற்குப் பிறகு சித்தரஞ்ஜனன் எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான். நாங்கள் அப்பால் பறந்து செல்லலாயினோம். போகும் வழியெல்லாம் நிலவுக்கதிர் செய்யும் மெல்லிய இசையும், மாடங்கள்தோறும் கந்தர்வ யுவதிகளும், வாலிபர்களும், குழந்தைகளும், பெரியோரும் ஆயிரவிதமான போகங்களிலே பொழுது கழிக்கும் காட்சியும் அற்புதமாயிருந்தன. பூலோகத்திலிருக்கும்போது நான் போகங்களில் இத்தனைவித முண்டென்பதைப் பிரதிபா சக்தியினால் கூடக் கண்டிருந்ததில்லை. கொஞ்சதூரம் போனவுடனே. பர்வதகுமாரி "அதோ, பார்!" என்று காட்டினாள். "அஹஹா! அஹஹா! அங்கே என்ன விசேஷம்?" என்று கேட்டேன். அதிவிசாலமான மாடம் காணப்பட்டது. அதில் ஐம்பதினாயிரம் பேருக்குமேல் இருப்பார்கள் என்று தோன்றிற்று, பெரிய கூட்டம். ஆனால், பூலோகத்திலுள்ள கூட்டங்களைப் போல், ஒருவருக்கொருவர் நெருக்கி மேலே விழுந்து தள்ளி, கையால் ஒதுக்கி காலால் மிதித்து முகங்களைச் சுழித்துக் கொண்டு வெயர்த்து வெந்து போயிருக்கவில்லை. அந்த கந்தர்வக் கூட்டத்தார் வளைய வளைய அங்குமிங்கும் சலித்துக் கொண்டிருந்த போதிலும் ஒருவருக்கொருவர் சிறிதேனும் தொந்தரை செய்யாமல் விஸ்தாரமான இடம் விட்டு முக மலர்ச்சியுடன் ஸஞ்சரித்தனர். எதிரே ஸ்திரீகள் வந்து விலக இடமில்லாமற் போனால் உடனே இறகு விரித்து மேலே எழும்பி அந்த ஸ்திரீகள் |