அவருக்கு வயது முப்பதுக்கு மேலிராது. மிகவும் அழகான புருஷன். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவர் வீட்டுக்கு நம்முடைய விசாலாக்ஷி போய்ச் சேர்ந்தாள். அங்கு இவள் போன தினத்துக்கு மறுநாள் காசியிலிருந்து ஒரு பால சந்நியாஸி வந்திருந்தார். இவர் ஜாதியில் தென்தேசத்துப் பிராமணர். ஆனால் பார்வைக்கு வடதேசத்தார்களைப் போலவே சிவப்பாகவும் புஷ்டியாகவும் உயரமாகவும் ஆஜாநுபாகுவாகவும் இருப்பார். மிகவும் அழகிய வடிவமுடையவர். இவருக்கு நாலைந்து பாஷைகள் நன்றாகத் தெரியும். இவர் சங்கீதத்தில் அபார வித்வான். இவர் தம்மை ஜீவன்முக்தி அடைந்து விட்டதாகச் சொல்லிக் கொண்டார். எனினும், சதா இவருடைய முகத்தில் கவலைக் குறிகள் இருந்து கொண்டே யிருந்தன. மகா மேதாவி. உலகத்து சாதாரண மூட பக்திகளை யெல்லாம் போக்கிவிட்டார்; ஆனால் தீய விதியின் வசத்தால் தமக்குத்தாமே மானஸீகமான பல புதிய மூட பக்திகளும் பொய்ப் பிசாசுகளும் உற்பத்தி செய்து கொண்டு ஓயாமல் அவற்றுடன் போராடிக் கொண்டிருந்தார். அதாவது, அவர் இன்னும் ஜீவன்முக்தி அடைந்துவிடவில்லை. அடைய வேண்டிய மார்க்கத்திலிருந்தார். எனிலும், தாம் முக்தி அடைந்து விட்டதாகவே அவர் பிறரிடம் சொல்லியது மட்டுமின்றித் தம்முடைய மனதுக்குள்ளும் அவ்வாறே நிச்சயப்படுத்திக் கொண்டு விட்டார். திடீரென்று விசாலாக்ஷி அவர்களுக்கு முன்னே தோன்றி, "ஜீவன் முக்தி இவ் வுலகில் சாத்திய மென்பதே பொய். விசாலாக்ஷி தம் வீட்டுக்கு வந்த தினத்திற்கு மூன்று நாட்களின் பின்பு ஒருநாள் மாலையில், நிலவு தோன்றும் பருவத்தில் மிட்டாய்க்கடை சங்கரய்யர் தமது வீட்டு மேடையில் அழகிய நிலா முற்றத்தில் நான்கு நாற்காலிகள் போட்டு நடுவே மேஜையின் மீது பக்ஷணங்கள், தேநீர், வெற்றிலை, பாக்கு, பூக்கொத்துக்கள் முதலியன தயார் செய்து வைத்தார். |