பக்கம் எண் :

அர்ஜூன சந்தேகம்

ஹஸ்தினாபுரத்தில் துரோணாசாரியரின் பள்ளிக்கூடத்தில் பாண்டு மகாராஜாவின் பிள்ளைகளும் துரியோதனாதிகளும் படித்து வருகையில், ஒரு நாள் சாயங்கால வேளையில் காற்று வாங்கிக்கொண்டு வரும்போது, அர்ஜுனன் கர்ணனைப் பார்த்து, "ஏ கர்ணா. சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?" என்று கேட்டான். (இது மகாபாரதத்திலே ஒரு உபகதை; சாஸ்திர பிரமாண முடையது; வெறும் கற்பனையன்று).

"சமாதானம் நல்லது" என்று கர்ணன் சொன்னான்.