பக்கம் எண் :

அர்ஜூன சந்தேகம்

"காரணமென்ன?" என்று கிரீடி கேட்டான்.

கர்ணன் சொல்லுகிறான்: "அடே, அர்ஜூனா, சண்டை வந்தால் நான் உன்னை அடிப்பேன். அது உனக்குக் கஷ்டம். நானோ இரக்க சித்த முடையவன். நீ கஷ்டப்படுவதைப் பார்த்தால் என் மனம் தாங்காது. ஆகவே இரண்டு பேருக்கும் கஷ்டம். ஆதலால் சமாதானம் சிறந்தது" என்றான்.

அர்ஜுனன்: "அடே கர்ணா, நம் இருவரைக் குறித்து நான் கேட்கவில்லை. பொதுப்படையாக உலகத்தில் சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா? என்று கேட்டேன்" என்றான்.

அதற்குக் கர்ணன்: "பொது விஷய ஆராய்ச்சிகளில் எனக்கு ருசியில்லை" என்றான். இந்தப் பயலைக் கொன்று போடவேண்டும் என்று அர்ஜுனன் தன் மனதுக்குள்ளே தீர்மானம் செய்து கொண்டான். பிறகு அர்ஜுனன் துரோணாசாரியரிடம் போய் அதே கேள்வியைக் கேட்டான்.

"சண்டை நல்லது" என்று துரோணாசாரியர் சொன்னார்.

"எதனாலே?" என்று பார்த்தன் கேட்டான்.

அப்போது துரோணாசாரியர் சொல்லுகிறார்:

"அடே விஜயா, சண்டையில் பணம் கிடைக்கும்; கீர்த்தி கிடைக்கும், இல்லாவிட்டால் மரணம் கிடைக்கும். சமாதானத்தில் சகலமும் சந்தேகம் - ச - ச - ச - " என்றார்.

பிறகு அர்ஜுனன் பீஷ்மாசார்யரிடம் போனான். "சண்டை நல்லதா, தாத்தா, சமாதானம் நல்லதா?" என்று கேட்டான். அப்போது கங்கா புத்திரனாகிய அந்தக் கிழவனார் சொல்லுகிறார்: