பக்கம் எண் :

மண்ணுலகம்

நான் இருந்த பகுதியிலேனும் மேன்மாடமென்று ஒன்றிருந்தபடியால், கொஞ்சம் காற்று வரும். ராயர் கூட்டத்தாருக்கு அதுகூடக் கிடையாது. இரவிலே கொசுக்களின் தொல்லை பொறுக்க முடியாது. எனக்குத் தூக்கமே வராது. ராயருக்குக் காச நோயாதலால் அவர் இருமிக் கொண்டேயிருக்கிற சப்தம் ஓயாமல் கேட்கும். அவருடைய குழந்தைகள் ஒன்று மாற்றி மற்றொன்று அழுது கொண்டே யிருக்கும். கர்ப்பிணியாகிய அவர் மனைவி இடையிடையே விழித்துக் குழந்தைகளையோ, அல்லது கடவுளையோ அல்லது ராயரைத்தானோ, யாரையோ கன்னட பாஷையிலே திட்டிவிட்டு மறுபடியும் உறங்கி விடுவாள்.

ராயர் வீட்டு விஷயங்கள் இவ்வாறிருக்க, நமது வீட்டுச் சம்பிரமங்கள் இதைக் காட்டிலும் விசேஷம்.

கதையை இடையிலே விட்டு விட்டேனே. வீரராகவ முதலித் தெருவிலிருந்து வீட்டிற்கு வந்தேனா? வரும் வழியிலே "ஜட்கா" வண்டிகள், "துரை"கள் போகும் "கோச்சு"கள், புழுதி, இரைச்சல்,