உத்தரம் :- "பாரத தேசத்தில்தான் வர்ணாசிரம பேதங்களிருப்பதாகச் சொல்வது பிழை. சகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில்தான் வர்ணாசிரம நெறி சீர்கெட்டு போயிருக்கின்றது. பூர்வத்திலே பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத்தான் இருந்தது. அதற்கு அந் நாட்டிலுள்ள வேதங்கள், உபநிஷத்துக்கள். புராணங்கள், இதிஹாஸங்கள் முதலிய சகல நூல்களும் சாக்ஷி. இப்போது பாரத நாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறைதான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறி விட்டது. அது பற்றியே, அந்நாட்டினர், வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்." கேள்வி: - "பிராமண தர்மங்களை எனக்குப் போதனை செய்ய வேண்டும்." உத்தரம்: - "சங்கிரகமாகச் சொல்லுகிறேன். பிராமண வர்ணத்தார் ஒரு ஜன சமூகத்தின் அறிவுச் செல்வத்திற்குக் காவலாளிகள்; அறிவுப் பயிருக்கு உழவர்கள். அவரவர் தத்தம்மால் இயன்ற சாஸ்திரங்களைப் படித்து வைத்துக் கொண்டு அவற்றை வெவ்வேறு வர்ணத்தாருக்கு உரிமை நோக்கிக் கற்பிக்க வேண்டும். அவ்வாறு கற்பிப்பதற்கு, தமது உணவு மட்டிற்கு மேற்பட்ட எவ்விதமான கிரயமும் வாங்கலாகாது. 'எவன் வீட்டில் மறுநாள் ஆகாரத்திற்கு இன்றே நெல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவன் பிராமணன் ஆகமாட்டான்' என்று யாக்ஞ வல்கியர் சொல்கிறார். "ஜனங்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கெல்லாம் அறிவின்மையே காரண மாதலாலும், அந்த அறிவின்மை ஏற்படாமற் பாதுகாப்பதே பிராமணன் கடமை யாதலாலும் பிராமணர்களே பொறுப்பாளிகளாவார்கள். ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் |