சூத்திர தர்ம போதனையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண்மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும். வைசிய தர்மம் குறைந்தால், அறிவு வகுப்பினர் தாம் வைசிய நூல் கற்பதும் கற்பிப்பதுமே முதற் கடமையாகக் கொண்டு, கையில் அகப்பட்டவர்களையெல்லாம் மெய்யான வைசியராக்கி விடுவார்கள். க்ஷத்திரிய தர்மங்திற்கும், பிராமண தர்மத்திற்கும் ஊனம் வர இடங்கொடுக்கவே கூடாது. க்ஷத்திரிய பிராமண தர்மங்களுக்கு ஊனம் நேரிடுமாயின் ஜன சமூகம் முழுவதுமே க்ஷீணமடைந்து போய்விடும். "அப்படி ஏதேனும் மகா விபத்து நேரிடக்கூடிய தருணத்தில், `அவரவர் தத்தம் தர்மங்களை மட்டுமே கருதி நிற்போம், மற்றவர் தர்மங்களை நாமேன் கருதவேண்டும்' என்று சும்மா இருத்தல் கூடாது. வீடு தீப்பற்றி எரியும்போது, தகப்பன் தன் காரியஸ்தலத்திற்கும், மகன் பள்ளிக்கூடத்திற்கும், பெண்கள் பூஞ்சோலைக்கும், தாய் கோயிலுக்கும், வேலைக்காரன் காய் கிழங்குகள் வாங்கும் பொருட்டுக் கடைக்கும், பரிசாரகன் சமையலுக்காகத் தண்ணீருக்கும், உல்லாசமாகப் புறப்பட்டுக் கொண்டிருக்கலாமா? நெருப்பை அவிக்க முயல வேண்டியது எல்லோருக்கும் கடமை. காரியஸ்தலத்திற்குப் போவதைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்; கோயில்களையும், பள்ளிக்கூடங்களையும் கள்வன் கொண்டுபோய் விடமாட்டான்; மறுநாள் கவனித்துக் கொள்ளலாம். விளையாட்டுக்குப் பூக்கொய்து வருதல் பெரிதன்று; காய்கிழங்குகள் பெரிதில்லை; சமையல் பெரிதில்லை. வீட்டிலே பற்றியிருக்கும் நெருப்பை அவிப்பது தான் பெரிது. அதற்குத்தான் எல்லோரும் பாடுபட வேண்டும். கலியிலே வர்ண வேறுபாடுகள் பொய்; வெறும் ஏமாற்று. பாரத நாட்டைப் பி நீர் கேட்டீர், பாரத நாட்டில் இப்போது கலி யுகம். ஆனால், இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளில் கலியுகம் நீங்கிக் கிருதயுகம் பிறக்கப்போகின்றது. அப்போது அந்த நாட்டிலே உண்மையான வர்ணாசிரம பேதங்கள் ஏற்பட்டு விளங்கும். இப்போதிருக்கும் வஞ்சனைப் பேதங்கள் நீங்கிவிடும். |