அந்த மனிதர்களெல்லாம் மூடர்களும், துரோகிகளுமாவார்களென்று எனக்குத் தோன்றுகிறது" என்று சொல்லிக்கொண்டேன். நான் இவ்வாறு ஆலோசிப்பதை அறிந்துகொண்ட மனம், "அப்பாடா!" என்று பெருமூச்சு விட்டு, தன் நடுக்கமெல்லாம் தீர்ந்து ஆறுதலுடனிருந்தது. எனக்கும் சந்தோஷம் உண்டாயிற்று. எனது மனமோகினிக்கு ஓர் முத்தங் கொடுத்தேன். |