பக்கம் எண் :

மாணிக்கஞ் செட்டி மானி அய்யனை நகைத்தது

வாரும், அய்யரே? என்றான் செட்டி.

"தங்களுடைய உத்தரவுக்குக் காத்துக் கொண்டிருக்கிறேன்? என்று மானி அய்யன் வணக்கத்துடன் சொன்னான்.

"பார்ப்பான் கெட்டிக்காரன்? என்று செட்டி தன் மனதிலே நினைத்துக் கொண்டான்.

ரஸிக சிரோமணி என்னும் கழுதை சொல்லிற்று:

"மேற்படி மாணிக்கஞ் செட்டி பார்ப்பானை நகைத்தது போல் நீயும் என்னை இப்போது நகைக்கிறாய், பின்னிட்டு என்னை நீயே மெச்சுவாய்.?

அதற்குக் குயில் சொல்லிற்று: -

"ரஸிக மாமா, உனக்குச் சங்கீதமும் வராது. கதை சொல்லவும் தெரியவில்லை? என்றது. கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது. "எனக்கா வராது? எனக்கா? என்னையா சொல்லுகிறாய்? என்னைத்தானா?" என்றது. "ஆம், ஆம், ஆம், ஆம்? என்று குயில் நான்கு தரம் சொல்லிற்று.

"உனக்கு இத்தனை மதமா?" என்றது கழுதை.

"அட, உண்மையைச் சொல்லக் கூடாதா?" என்றது குயில்.

"சொல்லக்கூடாது? என்றது கழுதை. "சொல்லலாம்? என்றது குயில்.

"நீ அந்த மரத்திலிருந்து கொஞ்சம் இறங்கிக் கீழே வா? என்றது கழுதை.

"நீ தான் தயவுசெய்து இங்கே கொம்பின்மேலே ஏறி வா? என்று சொல்லிக் குயில் நகைத்தது.