?ஏனம்மா, இவர் மாத்திரம் பயப்படாமல் போகிறாரே, அதென்ன?" தாய் சொல்லுகிறது:- "இவர் சித்தர். நாம் கடித்தால் சாகமாட்டார். இவருக்குிலே பயமில்லை. ஆகையால் பகையில்லை. இவர் பெரிய ஞானி. இவர் வரங் கொடுத்தாலும் பலிக்கும்; சாப மிட்டாலும் பலிக்கும்.? இவ்வாறு தாய் சொல்லியதைக் கேட்டவுடனே குட்டி சிறிது நேரம் ஏதோ யோசனை செய்து பார்த்துப் பிறகு "அம்மா, இவர் எங்கே குடியிருக்கிறார்?" என்று கேட்டது. "அதோ தெரிகிறது பார், தூரத்திலே ஒரு கிராமம். அதற்குக் கிழக்கே ஒரு சுனையும் பக்கத்திலே ஒரு தோப்பும் இருக்கின்றன. அந்தத் தோப்பிலே இவர் குடியிருக்கிறார்? என்று தாய் சொல்லிற்று. சில நாளுக்கப்பால் இந்தப் ரோஜாப் பூ என்ற பாம்புக் குட்டி தனியே முனிவர் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தது. அவர் ஒரு மரத்தடியிலே உட்கார்ந்திருந்தார். காலிலே போய் விழுந்தது. "என்ன வேண்டும்?" என்று கேட்டார். "ஒரு வரம்? என்றது. "என்ன வரம்?" என்று கேட்டார். "நான் நினைத்தபோது மிகவும் அழகான ஒரு மனிதப் பெண்ணாக மாறவேண்டும்? என்று பாம்புக் குட்டி சொல்லிற்று. "எதன் பொருட்டு?" என்றார். |