பக்கம் எண் :

மாதர் - பெண்

வாத்தியார் மறுபடியும் கோஷிக்கலானார்.

''ருதுவான பிறகு, பெண்ணுடைய இஷ்டப்படிகலியாணம் செய்யவேண்டும்; புருஷன் கொடுமையைச் சகிக்க முடியாமலிருந்தால், ஸ்திரீ சட்டப்படி அவனை த்யாஜ்யம்செய்துவிடச் சட்டமும் இடம் கொடுக்கவேண்டும் ; ஊர்க்காரரும் தூஷணை செய்யக்கூடாது. பெண் உழைத்துச்சாப்பிட முடியாது. அந்த விஷயத்தில் ஐரோப்பிய ஸ்திரீஸ்வதந்திர முயற்சிக்காரருடைய அபிப்பிராயத்திலிருந்து என்அபிப்பிராயம் பேதப்படுகிறது. பெண்ணை ஸம்பாத்யம் பண்ணிபிழைக்கவிடக்கூடாது. அவளுக்கு பிதுரார்ஜிதத்தில் பாகமிருக்கவேண்டும். கலியாணம் செய்து கொண்டால் புருஷனுடையசொத்து அவளுடையதாகவே பாவிக்கவேண்டும். (பெண்டாட்டிகையில் காசு கொடுக்கக் கூடாதென்று சொல்லுகிறமனுஷ்யர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.) பெண்அவளிஷ்டப்படி சஞ்சரிக்கலாம். தனி இடங்களில் ஸ்திரீகளைக்"கண்டால் மரியாதை செய்து வணங்கவேண்டும். அப்படி எந்தப்புருஷன் மரியாதை செய்யவில்லை யென்று தோன்றுகிறதோ,அவனை கிருகஸ்தர்கள் நெருங்கக்கூடாது. அவன்கூட ஒருவனும்பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ளாமல் இருந்துவிடவேண்டும்.அப்படி வீதி வழியோ, கடைத்தெருவோ, ரயில் வழியோ,காசிப்பட்டணமோ ஸ்திரீகள் தனியே போனாலும், புருடர் கண்டுவணங்கும்படி ஏற்பாடு செய்வது நாளது தேதியில் இந்த தேசத்தில்வெகு கஷ்டம். என்ன செய்யலாம்? ஹிந்துக்களிலே நூற்றுக்குத்தொண்ணூறு பேர் மூட ஜனங்கள். அது எப்படி நாசமாய்போனாலும் படித்துக் கௌரவமாகக் குடித்தனம் பண்ணும்ஜனக்கூட்டத்துக்குள்ளே ''ஸ்திரீகள் சுயேச்சையாகப் பேசலாம்,சுயேச்சையாக ஸஞ்சரிக்கலாம்'' என்று வைக்க வேண்டும். அதுஸாத்யமாகும்படி புருஷரைத் தண்டிக்க வேண்டும். கையாலாகாதபேரைத் தண்டிப்பதிலே என்ன பிரயோசனம்! ஸ்வாமி எத்தனை"நாள் இந்தத் தேசத்தில் பழங்குப்பையில் முழுகிக் கிடக்கப்போகிறார்கள் ? நத்தைப் புழுவைப்போல ஆணும் பெண்ணும்கூடப் பிறக்கிறோம். உடன் பிறந்தான் ஆண்டான், உடன்பிறந்தவள் அடிமை, ஸ்வாமி ! சுத்த பாமரஜனங்கள்' என்றுசோனாமாரியாகப் பொழிந்தார்.

இந்தச் சமயத்தில் என்னுடைய குழந்தை வீட்டிலிருந்துஒடிவந்து என்னைச் சாப்பிடக் கூப்பிட்டது. நான் எழுந்தேன்.'பிரமராய வாத்தியார் சொல்லுகிற விஷயத்தைக் குறித்து உம்முடையஅபிப்பிராயமென்ன?' என்று என்னை நோக்கிக் கொங்கணபட்டர்கேட்டார்.

நான் சொல்லத் தொடங்கு முன்னே, வீராசாமிநாயக்கர்மேற்படி பட்டாசார்யாருடையதலையில் ஒரு குட்டுக் குட்டி,'நீர் சும்மா இருமே, ஓய்' என்று சொன்னார். பிறகு நான்: -'பூலோகத்துப் பஞ்சாயத்தெல்லாம் எனக்கு வேண்டியதில்லைஸ்வாமி, யாருக்கு என்ன காரியம் சித்தியாக வேண்டுமானாலும்,'ஓம் சக்தி, ஓம் சக்தி' என்று சொன்னால், அவர்களுக்கு அந்தக்காரியம் சித்தியாகும். இதுதான் எனக்குத் தெரிந்த விஷயம்'என்றேன

பிரமராய வாத்தியார் 'அது உண்மை' என்றார். இடிப்பள்ளிக்கூட முழுவதும்''வாஸ்தவந்தான்'' என்று ஒப்புக்கொண்டது.நான் போஜனத்துக்குப் புறப்பட்டேன்.