பக்கம் எண் :

மாதர் - தமிழ்நாட்டின் விழிப்பு

ஜீவஹிம்ஸை கூடாது. மதுமாம்ஸங்களால்பெரும்பான்மையோருக்குத் தீங்கு உண்டாகிறது.மதுமாம்ஸங்கள் இல்லாதிருந்தால் பிராமணருக்கு பெரிய கீர்த்தி.அது பெரிய தவம். அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக்கூடியஅநுஷ்டானம்.

ஆனாலும், தாம் ஒரு காரியத்தைச்செய்யாமலிருக்குமிடத்து, அதைப் பிறர் செய்யும்போது அஸூயைகொள்வது தவறு.

ஊண், உடை, பெண் கொடுக்கல,் வாங்கல் முதலியவிஷயங்களில் மூடத்தனமாகக் கட்டுப்பாடுகளும் விதிகளும்,தடைகளும் கட்டுவதில் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.

மேலும் உலகத்து மனிதர்களெல்லோரும் ஒரே ஜாதி."''இந்தச் சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அநியாயமாகமடிகிறார்களே'' யென்பதை நினைத்து நான் கண்ணீர் சிந்தியதுண்டு.இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன்,அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில் எனக்குச் சம்மதம்கிடையாது. எல்லாமனிதரும் ஒரேவகுப்பு.

சகல மனிதரும் சகோதரர். மனுஷ்யவர்க்கம் ஓருயிர்.இப்படியிருக்க நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமாக ஆசாரச்சுவர்கள் கட்டி, 'நான் வேறு ஜாதி. என் மைத்துனன் வேறு ஜாதி.இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது. அவனை ஜாதிப்பிரஷ்டம் பண்ணவேண்டும்' என்பது சுத்த மடமையென்பதைக்காட்டும் பொருட்டாக இத்தனை தூரம் எழுதினேனே தவிரவேறில்லை.

தமிழ் நாட்டில் ஜாதி ஸம்பந்தமான மூட விதிகளும்ஆசாரங்களும் சடசடவென்று நொறுங்கி விழுகின்றன.

அடுத்த விஷயம், பெண் விடுதலை. தமிழ் நாட்டில்பெண் விடுதலைக் கக்ஷிக்கு தலைவியாக ஸ்ரீமான் நீதிபதிசதாசிவய்யரின் பத்தினி மங்களாம்பிகை விளங்குகிறார். ஸ்ரீஅனிபெசண்ட் இந்த விஷயத்தில் அவருக்குப் பெரிய"திருஷ்டாந்தமாகவும், தூண்டுதலாகவும் நிற்கிறார்.

இவ்விருவராலும் இப்போது பாரத தேசத்தில்உண்மையான பெண் விடுதலை உண்டாக ஹேது ஏற்பட்டதுஇவ்விருவருக்கும் தமிழுலகம் கடமைப்பட்டது இவர்களுடையகக்ஷி என்னவென்றால், ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு; மனம்உண்டு; புத்தியுண்டு; ஐந்து புலன்கள் உண்டு. அவர்கள் செத்தயந்திரங்களல்லர். உயிருள்ள செடிகொடிகளைப் போலவுமல்லர்.சாதாரணமாக ஆண் மாதிரியாகவேதான். புறவுறுப்புக்களில்மாறுதல்; ஆத்மா ஒரே மாதிரி.''

இதனை மறந்து அவர்களைச் செக்கு மாடுகளாகப்பாவிப்போர் ஒரு திறத்தார். பஞ்சுத் தலையணிகளாகக் கருதுவோர்மற்றொரு திறத்தார். இரண்டும் பிழை.