பக்கம் எண் :

மாதர் - பெண்

''ஆஸ்திரேலியா, ந்யூஸிலாந்து, டென்மார்க், நார்வே,யுனைடெட் ஸ்டேட்ஸிலே பாதி, கானடா-இத்தனை தேசங்களில்,பெண்களுக்கு வாக்குச் சீட்டு கெட்டியாகவுண்டு. இங்கிலாந்திலேகூட அந்த அநுஷ்டானத்தை ஏற்படுத்த வேண்டுமென்று பலர்மன்றாடுகிறார்கள். போன மந்திரி ஆஸ்க்வித் கூட அந்தக்கட்சியை நெடுங்காலமாக எதிர்த்து வந்து, ஸமீபத்தில் அதற்கனுகூலமாகப் பேசுகிறாரென்று கேள்வி, இதை விடுங்கள். 

''துருக்கி தேசம் தெரியுமா ? அங்கே நேற்று வரைஸ்திரீகளை மூடிவைத்திருப்பது வழக்கம். கஸ்தூரி மாத்திரைகளைடப்பியில் போட்டு வைத்திருக்கிறார்களோ இல்லையோ ? அந்தமாதிரி; திறந்தால் வாசனை போய்விடும் என்று நம்முடையதேசத்திலேயே கூட அநேக ஜாதிக்காரர் அந்த மாதிரிதானே"செய்கிறார்கள். ஹிந்து ஸ்திரீ ஏறக்குறைய அடிமைநிலைமையிலிருக்கிறாள். நம்முடைய வீடுகளில் அறைக்குள்அடைத்து வைப்பது கிடையாது. அறைக்குள்ளே தான்இருந்தாலென்ன, குடி கெட்டுப் போச்சுது? அடிமையைத் தண்ணீர்கொண்டுவர தெருவிலே விட்டால்தானென்ன?அதுவும் கூடாதென்றுகதவைப் பூட்டிக் கைதியாக வைத்திருந்தாலென்ன? எந்தநிலைமையிலிருந்தாலும் அடிமை அடிமைதானே ஸ்வாமி?மனுஷ்யஜீவனுக்கு இரண்டு வித நிலைமைதான் உண்டு. எதுவும்தன்னிஷ்டப்படி செய்து, அதனால் ஏற்படக்கூடிய இன்பநஷ்டங்களுக்குத் தான் பொறுப்பாளியாக இருப்பது ஒரு நிலைமை,அதுதான் சுதந்திரம். அப்படி இல்லாமல், பிறர் இஷ்டப்படி தான் இஷ்டமிருந்தாலும் இல்லாவிட்டாலும் மீறி நடக்கக்கூடாதபடிகட்டுப்பட்டிருத்தல், அடிமை நிலை. அந்த ஸ்திதியில் நம்முடைய"ஸ்திரீகளை வைத்திருக்கிறோம். சும்மா பொய்க்கதை சொல்வதில்பிரயோஜனமென்ன, ஸ்வாமி?  நம்முடைய ஸ்திரீகள் அடிமைகள்.அதிலே சந்தேகமில்லை. ஹிந்துக்களுக்குள்ளே புருஷர்களுக்கேஅரசாட்சியில் வாக்குச் சீட்டுக் கிடையாது. அவர்களுக்குள்ளேஸ்திரீகள் அடிமைகள். ஹிந்து ஸ்திரீகளைக் காட்டிலும் இப்போதுதுருக்கி ஸ்திரீகள் நல்ல நிலைமையில் வந்திருக்கிறார்கள். மிஸ்.எல்லிஸன் என்றொரு இங்கிலீஷ்காரி ஒரு புஸ்தகம் போட்டு,நேற்றுத்தான் ஒரு பத்திரிகையில் அந்தப் புஸ்தகத்தைப் பற்றிஅபிப்பிராயம் போட்டிருந்தது. அந்த அபிப்பிராயம் எழுதினவர்ஒரு சிங்களத்துப் பௌத்தர். அவர் பெயர் ஜினராஜதாஸர். அவர்ஒரு இங்கிலீஷ்காரியைக் கலியாணம் பண்ணிக்கொண்டிருக்கிறார்.துருக்கி ஸ்திரீகள் படிப்பு, ராஜியப் பொறுப்பிலே ஊக்கம் முதலியசகல அம்சங்களிலேயும் போதுமானபடி விருத்தியாய்க் கொண்டுவருவதாக அந்த இங்கிலீஷ் புத்தகத்தில் போட்டிருப்பதாக அந்தபௌத்தர் சொல்லுகிறார். ஐயோ, ராமா, ராகவா, கேசவா, விசுவாமித்ரா!- நமக்கு ஸந்தியாவந்தனம் கொஞ்சம் மறதி!'

இங்ஙனம், அவர் பிரசங்கத்தில் கொஞ்சம் மூச்சுவாங்கும்பொருட்டாக, ஒருவிகட வார்த்தை சொன்னவுடனே, அவருடையமுக்கிய சிஷ்யராகிய கொங்கணபட்டர் கொல்லென்று சிரித்தார்.வீராசாமி நாயக்கர் மேற்படி பட்டாசார்யாருடைய தலையில் ஒருகுட்டுக்குட்டி ஒரு தரத்துக்குப் பொடி போட்டுக்கொண்டார்.