(3) நாராயண செட்டியார்(பணக்காரர். குள்ளம்,வட்டிக்குக் கொடுக்கல் வாங்கல், இடிப்பள்ளிக்கூடம் -இந்த இரண்டு தொழிலையுந் தவிர, மூன்றாவதுகார்யத்தை இவர் கவனிப்பதே கிடையாது. வாரத்துக்கொருமுறை வெள்ளிக் கிழமையன்று பிள்ளையார் கோவிலுக்குப்போவார். மற்றப் படி வீட்டை விட்டு வெளியேறமாட்டார்.இவரை அந்தப் புரச்செட்டியாரென்றும் சொல்லுவார்கள். (4) குருசாமி பாகவதர். (ஸங்கீத வித்வான்;குழந்தைகளுக்குப் பாட்டு வாத்தியமும் சொல்லிக்கொடுப்பார். சாரீரம் கட்டை.) மேற்படி சபையில் நானும் போய்ச் சேர்ந்தேன்."பிரமராய வாத்தியாருக்கு என்னைக் கண்டவுடன் கொஞ்சம்சந்தோஷம் ஏற்பட்டது. 'வாருங்கள், வாருங்கள், உங்களுக்குரஸப்படக்கூடிய விஷயந்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்'என்றார். 'அதாவது என்ன விஷயம்?' என்று கேட்டேன். 'ஸ்திரீயுடைய பேச்சு' என்றார். 'ஸ்திரீகளைப் பற்றின பேச்சா? சரிதான், மேலேஉபந்யாஸம் நடக்கட்டும்' என்றேன். வாத்தியார் கர்ஜனையைத் தொடங்கினார்: 'நான் சொன்ன விஷயத்தைச் சுருக்கமாக ஸ்ரீபாரதியாரின் புனை பெயர். ''சக்திதாஸ''ருக்கு மறுமுறைசொல்லிக் காட்டிவிட்டு மேலே சொன்னால் தான் அவருக்குத்"தொடர்ச்சி தெரியும்' என்று சொல்லி பூர்வ கதையையெடுத்தார். அந்த நிமிஷத்தில் வீராசாமி நாயக்கர் ஒரு தரம்பொடிபோட்டுக் கொண்டு கொங்கண பட்டர் தலையில் ஒருகுட்டுக் குட்டினார். 'சில்லரை விளையாட்டு வேண்டாம். வாத்தியார்பிரசங்கம் நடக்கட்டும்' என்றேன். வாத்தியார் கர்ஜனை செய்யலானார். 'இந்தியாவின் ஆண் பிள்ளைகளுக்குக்கூட வாக்குச் சீட்டுக் கிடையாது. அதாவது ஜனங்களுடையஇஷ்டப்படி ஆள் நியமித்து ஜன சபையாலே நடத்தும்அரசாட்சியுரிமை ஹிந்துகளுக்குக் கிடையாது. ஹிந்துக்களுக்குப்புத்தி சொற்பம். நம்முடைய தேசத்தில் ஆண் பிள்ளைகளுக்குக்கிடையாத மேற்படி வாக்குச் சீட்டுச் சுதந்திரம் வேறு சிலதேசங்களிலே பெண்களுக்கு உண்டு. அதாவது, அரசாட்சிஇன்னபடிதான் நடக்கவேண்டுமென்று நியமிக்கும் பாத்தியதைஅங்கே ஸ்திரீகளுக்கும் உண்டு. |