பக்கம் எண் :

மாதர் - பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது?

[புதுச்சேரியில் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியின் குமாரிஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்றது.]

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டு மன்று,பெண்ணுக்கும் அப்படியே.

ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழவிரும்புதல்மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம்விடுதலை. அடிமைகளுக்கு இன்பம் கிடையாது. தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்தார் படுங்கஷ்டங்களைக் குறித்து,1896ம் வருஷத்தில் கல்கத்தாவில் கூடிய பன்னிரண்டாயிரம்ஜனசபைக் (காங்கிரஸ்) கூட்டத்தில் செய்யப்பட்ட தீர்மானமொன்றை ஆதரித்துப் பேசுகையில் வித்வான் ஸ்ரீ பரமேச்வரன்பிள்ளை பின்வருமாறு கூறினார்:-

''மிகவும் உழைப்பாளிகளாகிய ஹிந்து தேசத்தார் அந்த"நாட்டில் பரம்பரை முறியடிமைகளாக வாழும்படி நேர்ந்திருக்கிறது.அங்கு நம்மவர் உத்திரவுச் சீட்டில்லாமல் யாத்திரை செய்யக்கூடாது. இரவு வேளையில் வெளியே சஞ்சரிக்கக்கூடாது.நகரங்களுக்கு நடுவே குடியிருக்கக் கூடாது. ஒதுக்கமாகநமக்கென்று கட்டப்பட்டிருக்கும் சேரிகளில் வசிக்க வேண்டும்.ரயில் வண்டியில் மூன்றாவது வகுப்பிலேதான் ஏறலாம்;முதலிரண்டு வகுப்புக்களில் ஏறக்கூடாது. நம்மை ட்ராம்வண்டியிலிருந்து துரத்துகிறார்கள். ஒற்றையடிப் பாதையினின்றுகீழே தள்ளுகிறார்கள். ஹோட்டல்களில் நுழையக்கூடாதென்கிறார்கள். பொது ரஸ்தாக்களில் நடக்கக் கூடாதென்றுதடுக்கிறார்கள். நம்மைக்கண்டால் காறி உமிழ்கிறார்கள். 'ஹூஸ்'என்று சீத்காரம் பண்ணுகிறார்கள். நம்மை வைகிறார்கள்.சபிக்கிறார்கள். மனுஷ்யஜந்துக்களினால் சகிக்கக்கூடாத இன்னும்எத்தனையோ அவமானங்களுக்கு நம்மை உட்படுத்துகிறார்கள்.ஆகையால் நம்மவர் இந்த நாட்டிலேயே இருந்து பஞ்சத்திலும்கொள்ளை நோயிலும் அழிந்திட்டாலும் பெரிதில்லை. நமதுஸ்வதந்திரங்களை வெளிநாடுகளில் அன்னியர் காலின் கீழேபோட்டு மிதிக்காதபடி ராஜாங்கத்தாரால் நம்மைக் காப்பாற்றமுடியாவிட்டால், நம்மவர் வேற்று நாடுகளுக்குக் குடியேறிப்போகாமல் இங்கிருந்து மடிதலே நன்று' என்றார். என்னகொடுமையான நிலை பார்த்தீர்களா?

ஆனால், சகோதரிகளே, தென் ஆப்பிரிக்காவில் மாத்திரமேஇவ்விதமான கொடுமைகள் நடக்கின்றன என்று நினைத்து விடாதீர்கள்!