சகோதரிகளே! ஓளவையார் பிறந்தது தமிழ் நாட்டில்;மதுரை மீனாக்ஷியும், அல்லி அரசாணியும் நேற்றுமங்கம்மாளும் அரசு புரிந்த தமிழ் நாட்டிலே நம்முடைய நிலைமை தென்னாப்பிக்காவில் ஹிந்துதேசக் கூலிகளுடையநிலைமையைக் காட்டிலும் கேடு கெட்டிருக்கிறதா? இல்லையா?உங்களுடைய அனுபவத்திலிருந்து நீங்களே யோசனை பண்ணிச்சொல்லுங்கள். நாமும் ஸ்வேச்சைப்படி வெளியே சஞ்சரிக்கக்கூடாது. நம்மைச் சேரிகளில் அடைக்காமல் சிறைகளில்"அடைத்து வைக்க முயற்சி செய்கிறார்கள். ரயில் வண்டிகளில்நமக்கென்று தனிப்பகுதி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.நம்மைக் கண்டாலும் ஆண் மக்கள் நிஷ்காரணமாய் சீறிவிழுகிறார்கள்; காறி உமிழ்கிறார்கள்; வைகிறார்கள்; அடிக்கிறார்கள்; நாம் நமதிஷ்டப்படி பிறருடன் பேசக்கூடாதென்றுதடை செய்கிறார்கள். மிருகங்களை விற்பதுபோல், நம்மைவிலைக்கு விற்கிறார்கள். நம்முடைய நூல்களிலும்ஸம்பாஷணைகளிலும் ஓயாமல் நம்மைத் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். வழக்கத்தால் நாம் இத்தனை பாடுக்கும்ஒருவாறு ஜீவன் மிஞ்சியிருக்கிறோமெனினும், இந்த நிலை மிகஇழிதான தென்பதிலும், கூடிய சீக்கிரத்தில் மாற்றித் தீரவேண்டியதென்பதிலும் சந்தேகமில்லை. இதற்கு மருந்தென்ன? தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்துக்கூலியாட்களுக்கு ஸ்ரீமான் மோஹனதாஸ் கரம்சந்த் காந்தி எந்தவழி காட்டினாரோ, அதுவே நமக்கும் வழி. தென்ஆப்பிரிக்காவில்வெள்ளையரை ஹிந்துக்கள் ஆயுத பலத்தால் எதிர்க்கவில்லை.கைத்துப்பாக்கி, வெடிகுண்டு முதலியவற்றை உபயோகிக்கவிரும்பினர் சில இளைஞரைக் கூட அது செய்யலாகாதென்றுமஹாத்மா காந்தி தடுத்து விட்டார். 'அநியாயத்தை அநியாயத்தால்எதிர்த்தலென்பது அவசியமில்லை. அதர்மத்தை அதர்மத்தால்தான்கொல்ல வேண்டுமென்பது அவசியமன்று. நாம் அநியாயத்தை"நியாயத்தால் எதிர்ப்போம்; அதர்மத்தை தர்மத்தால் ஒழிப்போம்'என்று காந்தி சொன்னார். சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவேஉபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம்அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள்அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தைபாட்டனாராகவும், கணவர் காதலராகவும், வாய்த்திருக்கின்றனர்.இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே,இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதைநினைக்கும்போது, என்னுடைய மனம், குருக்ஷேத்திரத்தில் போர்தொடங்கிய போது அர்ஜுனனுடைய மனது திகைத்ததுபோல,திகைக்கிறது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல்நினைக்கத்தகாத காரியம். அதுபற்றியே, ''சாத்வீக எதிர்ப்பி''னால்இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்றுநான் சொல்லுகிறேன். |