பக்கம் எண் :

மாதர் - பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது?

'அடிமைப்பட்டு வாழமாட்டோம்; ஸமத்வமாகநடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம்'என்று அவர்களிடம் வெளிப்படையாகவும் தெளிவாகவும்சொல்லி விட்டு, அதினின்றும் அவர்கள் கோபத்தால் நமக்குவிதிக்கக் கூடிய தண்டனைகளையெல்லாம் தெய்வத்தைநம்பிப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுப்பதே உபாயம்.இந்த சாத்வீக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத்தொடங்க வேண்டுமாயின், அதற்கு இந்தக் காலமே சரியானகாலம். இந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாஸமே"நல்ல மாஸம். இன்றே நல்ல நாள். இந்த முகூர்த்தமே தகுந்தமுகூர்த்தம்.

சகோதரிகளே! இப்போது பூமண்டலமெங்கும்விடுதலைப் பெருங்காற்று வீசுகிறது. கொடுங்கோலரசர்களுக்குள்ளே கொடியவனாய் ஹிரண்யனைப்போல்ஐரோப்பாவின் கிழக்கே பெரும் பகுதியையும் ஆசியாவின்வடக்கே பெரும்பகுதியையும் ஆண்ட ஸார் சக்ரவர்த்தி,இப்போது ஸைபீரியாவில் சிறைபட்டுக் கிடக்கிறான். 'பாரதநாட்டைக் காப்பதிலே எனக்குத் துணை புரிய வாருங்கள்'என்று ஆங்கிலேயன் ஹிந்துக்களைக் கூப்பிடுகிறான்.விடுதலைக் காற்று ''வீர், வீர்'' என்று வேகமாக வீசுகிறது.

ஒரு ஸ்திரீயானவள் இந்த ஸாத்வீக எதிர்ப்புமுறையை அனுசரிக்க விரும்பினால் தனது கணவனிடம்சொல்லத் தக்கது யாதெனில்:-

'நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாகவாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன்"வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல்செய்யமாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித்தின்றுகொண்டிருப்பேன். உனக்குச் சோறுபோடமாட்டேன். நீஅடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன்.இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும்மாட்டேன்' என்று கண்டிப்பாகச் சொல்லி விடவும் வேண்டும்.இங்ஙனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரியஇன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண்டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வைப்பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக்கூடாது. ''சிறிது சிறிதாக,படிப்படியாக ஞானத்தை ஏற்படுத்திக் கொள்வோம்'' என்னும்கோழை நிதானக் கட்சியாரின் மூடத்தனத்தை நாம்கைக்கொள்ளக் கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும்.அதுவும் இந்த க்ஷணத்தில் வேண்டும்.

இங்ஙனம், ''பரிபூர்ண ஸமத்வ மில்லாத இடத்திலேஆண் மக்களுடன் நாம் வாழமாட்டோம்'' என்று சொல்வதனால்,நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும்ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோயாயினும்,எத்தன்மையுடையனவாயினும், அவற்றால் நமக்கு மரணமே''நேரிடினும், நாம் அஞ்சக்கூடாது. ஸஹோதரிகளே!  ஆறிலும்சாவு; நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான்செய்கிறார்கள்; ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான்செய்கிறார்கள். ஆதலால் ஸஹோதரிகளே, பெண்விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்ம யுத்தம்தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்திதுணை செய்வாள். வந்தே மாதரம்.