பக்கம் எண் :

மாதர் - தமிழ் நாட்டு மாதருக்கு

இந்தியா தேசத்து ஸ்திரீகள் இங்குள்ள ஆண்மக்களால் நன்கு மதிக்கப்படுவதற்குள்ள பல உபாயங்களில்வெளி நாட்டாரின் மதிப்பைப் பெற முயல்வதும் ஒருஉபாயமாம். திருஷ்டாந்தமாக, சில வருஷங்களுக்கு முன்பு,ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 'இந்தியா நாகரீகக்குறைவான தேசம்' என்ற எண்ணம் வெகு சாதாரணமாகப்பரவியிருந்தது. மேற்றிசையோர்களுக்குள்ளே சில விசேஷபண்டிதர்கள் மட்டும் நம்முடைய வேதங்கள்,உபநிஷத்துக்கள், ஸாங்கியம், யோகம் முதலிய தர்சனங்கள்(அதாவது ஞான சாஸ்திரங்கள்); காளிதாஸன் முதலிய மஹாகவிகளின் காவியங்கள்; ராமாயணம், பாரதம்; பஞ்ச தந்திரம்முதலிய நீதி நூல்கள் - இவற்றை மூலத்திலும்,"மொழிபெயர்ப்புக்களின் வழியாகவும் கற்றுணர்ந்தோராய்,அதிலிருந்து ஹிந்துக்கள் பரம்பரையாகவே நிகரற்றஞானத் தெளிவும் நாகரீகமும் உடைய ஜனங்கள் என்பதைஅறிந்திருந்தனர். இங்ஙனம் மேற்கு தேசங்களில்பதினாயிரம் அல்லது லக்ஷத்தில் ஒருவர் இருவர் மாத்திரம்ஒருவாறு நமது மேன்மையை அங்கீகாரம் செய்தனர்.எனினும், அந் நாடுகளிலே பொது ஜனங்களின் மனதில்''இந்தியா தேசத்தார் ஏறக்குறைய காட்டு மனிதரின்நிலையிலுள்ளோர்'' என்ற பொய்க் கொள்கையேகுடிகொண்டிருந்தது. அப்பால், ஸ்வாமி விவேகானந்தரும்பின்னிட்டு ரவீந்திரநாத தாகூர், ஜகதீச சந்திரவஸு முதலியமஹான்களும் மேற்றிசையில் விஸ்தாரமான யாத்திரைகள்செய்து தம்முடைய அபார சக்திகளைக் காண்பித்தபின்னரே, மேற்றிசைவாசிகளில் பலர், ''அடா! இந்தஹிந்துக்கள் நாகரீகத்திலும், அறிவிலும் இவ்வளவுமேம்பட்டவர்களா' என்று வியப்பெய்தினர்.

தவிரவும், மேற்கத்தியார் நம்மைக் குறைவாகநினைக்கிறார்கள் என்பதை அவ்விடத்துப் பத்திரிகைகளின்மூலமாகவும் புஸ்தகங்களின் மூலமாகவும் தெரிந்துகொண்டவர்களால் நமது தேசத்துக் கல்விப் பெருமையால்இந்தியாவின் உண்மையான மாட்சியை அறியாது நின்றஇங்கிலீஷ் படிப்பாளியாகிய நம்மவரின் பலரும் வெளி"நாட்டாரின் எண்ணத்தையே உண்மையெனக் கருதிமயங்கி விட்டனர். காலச் சக்கரத்தின் மாறுதலால்இந்நாட்டில் அறிவுத் துறைகள் பலவற்றிலும் மேற்படிஇங்கிலீஷ் படிப்பாளிகளே தலைமை வகிக்கும்படி நேர்ந்துவிட்டதினின்றும், இந்தியா தன் மாண்பை முற்றிலும்மறந்துபோய் அதோகதியில் விழுந்துவிடுமோ என்றுஅஞ்சக்கூடிய நிலைமை அநேகமாய் ஏற்படலாயிற்று.இப்படிப் பட்ட பயங்கரமான சமயத்தில் ஸ்வாமிவிவேகானந்தர் முதலாயினோர் தம்முடைய ஞானபராக்கிரமத்தால் மேற்றிசை நாடுகளில் திக்விஜயம்பண்ணி மீண்டனர். இதினின்றும், இங்குள்ள இங்கிலீஷ்படித்த சுதேச தூஷணைக்காரர் தமது மடமை நீங்கிஹிந்து நாகரீகத்தில் நம்பிக்கை செலுத்துவராயினர்.மேற்றிசையோர் எது சொன்னாலும் அதை வேதமாகக்கருதிவிடும் இயல்பு வாய்ந்த நம்மவர்,  முன்புஇந்தியாவை அந்த அந்நியர் பழித்துக்கொண்டிருந்தபோதுதாமும் பழித்தவாறே, இந்தியாவை அவர்கள் புகழத்தொடங்கியபோது தாமும் சுதேசப்புகழ்ச்சி கூறலாயினர்.விவேகானந்தர் முதலானவர்கள் ஐரோப்பியஅமெரிக்ககர்களால் போற்றப்படுவதன் முன்பு அம் ஹான்களை நம்மவர் கவனிக்கவேயில்லை. அப்பெரியோர்மேற்றிசையில் வெற்றி பெற்று மீண்ட மாத்திரத்தில்,அவர்களை நம்மவர் தெய்வத்துக் கொப்பாக எண்ணிவந்தனை வழிபாடுகள் செய்யத் தலைப் பட்டனர். இந்தவிஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாகக் கவனித்தறிந்துகொள்ளுதல் நன்று