சகோதரிகளே! தமிழ் நாட்டின் நாகரீகம் மிகவும் புராதனமானது.ஒரு தேசத்தின் நாகரீகம் அல்லது அறிவு முதிர்ச்சி இன்னதன்மை யுடையதென்று கண்டுபிடிக்க வேண்டுமாயின்,அதைக் கண்ணாடி போல விளக்கிக் காட்டுவது அந்த நாட்டில் வழங்கும் பாஷையிலுள்ள இலக்கியம். அதாவதுகாவியம் முதலிய நூல்களேயாம். இங்கிலாந்து தேசத்தின்தற்கால இலக்கிய நூல்களை வாசித்துப் பார்த்தோமாயின்,அதன், தற்கால நாகரீகத்தை ஒருவாறு அளவிடக் கூடும்.எனவே, தமிழ் நாட்டின் புராதன நாகரீகத்தைஅளவிட்டறிவதற்கு தமிழ் நூல்களே தக்க அளவுகோலாகின்றன. இந்தியாவில் பெரும்பான்மையான"பாஷைகள் ஸமஸ்க்ருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல;அங்ஙனம் திரிபுகளல்லாததுவும் ஸம்ஸ்க்ருதக் கலப்புக்குப்பிந்தியே மேன்மை பெற்றனவாம். தமிழ் பாஷைக்கோ இலக்கணம் முதல்முதலாகஅகஸ்தியராலும் அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்நி(தொல்காப்பியர்) என்ற முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்ட தென்பது மெய்யே. அதனின்றும் தமிழ்இலக்கணம் பெரும்பாலும் ஸம்ஸ்கிருத இலக்கணத்தைஅனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கின்ற தென்பது மெய்யேஎனினும் வடமொழிக் கலப்புக்கு முந்தித் தமிழுக்கு வேறுவகையான இலக்கணமிருந்து ஒரு வேளை பின்னிட்டுமறைந்திருக்கக் கூடுமென்று நினைப்பதற்குப் பலஹேதுக்கள் இருக்கின்றன. இஃது எவ்வாறாயினும்,ஸம்ஸ்கிருத பாஷையின் கலப்புக்கு முன்னாகவே, தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த நாகரீகமொன்று நின்று நிலவிவந்ததென்பதற்கு அடையாளமாகத் தமிழில் மிக உயர்ந்ததரமுடைய பல பழைய இலக்கிய நூல்கள்காணப்படுகின்றன. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், பிறஇடங்களிலும் காணப்படும் நாகரீகங்களுக்கெல்லாம்முந்தியதும் பெரும்பான்மை மூலாதாரமுமாக நிற்பது"ஆர்ய நாகரீகம். அதாவது, பழைய ஸம்ஸ்கிருதநூல்களிலே சித்தரிக்கப்பட்டு விளங்குவது இந்த ஆரியநாகரீகத்துக்கு ஸமமான பழமை கொண்டது தமிழருடையநாகரீகம் என்று கருதுவதற்குப் பலவிதமானஸாக்ஷ்யங்களிருக்கின்றன. ''ஆதியில் பரம சிவனால்படைப்புற்ற மூல பாஷைகள் வடமொழியென்றுசொல்லப்படும் ஸம்ஸ்கிருதமும் தமிழுமேயாம்'' என்றுபண்டைத் தமிழர் சொல்லியிருக்கும் வார்த்தை வெறுமேபுராணக் கற்பனை அன்று. தக்க சரித்திர ஆதாரங்களுடையது. ''தமிழரும் ஆரியருமல்லாதஜனங்களைக் கடவுள் பேச்சில்லாமலா வைத்திருந்தார்?''என்று கேட்பீர்களாயின், மற்றச் சொற்களும் பலஇருக்கத்தான் செய்தன. ஆனால், மனித நாகரீகத்தில்முதன் முதலாக இவ்விரண்டு பாஷைகளிலேதான் உயர்ந்தகவிதையும், இலக்கியமும், சாஸ்திரங்களும் ஏற்பட்டன. மற்றபாஷைகளின் இலக்கிய நெறிகள் இவற்றுக்கும் பின்னேசமைதன. பல இடங்களில் இவை இயற்றின நடையையேமுன் மாதிரியாகப் கொண்டன. அதாவது ஆரியரும்தமிழருமே உலகத்தில் முதல் முதலாக உயர்ந்த நாகரீகப்பதவி பெற்ற ஜாதியார். இங்ஙனம் முதல் முறையாக நாகரீகம்பெற்ற இவ்விரண்டு வகுப்பினரும் மிகப் பழையநாட்களிலேயே ஹிந்து மதம் என்ற கயிற்றால் கட்டுண்டு ஒரே கூட்டத்தாராகிய செய்தி பூமண்டலத்தின்சரித்திரத்திலேயே மிக விசேஷமும் நலமும் பொருந்தியசெய்திகளில் ஒன்றாகக் கணித்தற்குரியது. |