தமிழ் நாட்டு மாதராகிய என் அன்புக்குரியஸகோதரிகளே! இத்தனை பழமையும் மேன்மையுஞ்சான்ற இரண்டு பகுதிகளின் கலப்பாகுந் தன்மையால்பாரத தேசத்திலேயே மற்றப் பிரதேசங்களிலுள்ளநாகரீகத்தைக் காட்டிலுங்கூட ஒருவாறு சிறப்புடையதாகக்கருதுவதற்குரிய ஆர்ய திராவிட நாகரீகம் உங்களுடையபாதுகாப்பிலிருக்கிறது. இதனை மேன்மேலும் போஷித்து வளர்க்குங்கடமை உங்களைச் சேர்ந்தது. எங்ஙனம் எனில்,பொதுப்படையாக நோக்குமிடத்தே மனித நாகரீகங்கள்ஆண் மக்களின் உதவி கொண்டு பிறப்பிக்கப்படுகின்றன.அப்பால் பெரும்பாலும் பெண்களாலேயேகாக்கப்படுகின்றன. இடைக்காலத்தில் மகம்மதிய நாகரீகம்"வந்து ஹிந்து தர்மத்தைத் தாக்கிற்று. ஆனால், ஹிந்துதர்மம் அதிலுள்ள முக்கிய அம்சங்களைத் தனதாக்கிக்கொண்டு, அந்தத் தாக்குதலால் அழிவெய்தாமல்,முன்னைக் காட்டிலும் அதிக சக்தியுடன் மிஞ்சி நின்றது.ஸமீப காலத்தில் ஐரோப்பிய நாகரீகம் இந்தியாவுக்குவந்து சேர்ந்திருக்கிறது. இதுவும் நமது நாட்டுநாகரிகத்துடன் நன்றாகக் கலந்து விட்டது. இனி இதன்விளைவுகளை நம் நாட்டாரின் அறிவினின்றும் முற்றிலும்பிரித்துக் களைதல் ஸாத்தியப்படாது. இது நம்முடையதேசஞானத்தின் மர்மங்களுக்குள்ளே கலந்துபெரும்பாலும் நமதாய் விட்டது. எனினும், நம்மவரிலேபல பண்டிதர்கள் பல வருஷங்களாக, 'இந்த ஐரோப்பியநாகரீகத்தை நாம் முற்றிலும் உதறித் தள்ளி விடுதல்நன்றோ? அல்லது, இதனை நாம் முழுமையாகவேதழுவிக் கொள்ளலாமா? அல்லது இதினுள்ளே நல்லஅம்சங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு தீயவற்றைக்களைந்து விடலாமா?' என்ற விஷயங்களைக் குறித்துநீண்ட ஆலோசனைகளும் விசாரணைகளும், ஆராய்ச்சிகளும் நடத்தி வருகிறார்கள். ஆனால், இந்தஐரோப்பிய நாகரீகமென்பது ஒரு ஸ்தூல வஸ்துவன்று.ஸ்தூல வஸ்துவாக இருந்தால் அதை நம் இஷ்டப்படிதுண்டு துண்டாக வகுக்கவும், வேண்டிய அம்சங்களைஎடுத்துக்கொள்ளவும், பிறவற்றை விலக்கவும்"ஸௌகர்யப்படும். மனிதர்களின் பயிற்சி இத்தகையபொருளன்று. அஃது ஸூக்ஷ்மப் பொருள். ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மை இயல்புக்குஸம்பந்தமில்லாதனவும், அதன் புறத்தோலின் மீது தோன்றும்தோற்றங்கள் போன்றனவுமாகிய முக்கியத் தன்மையில்லாதசில புற வழக்கங்களை விரும்பாத நம்மவரில் சிலர் அந்தநாகரீகத்தையே துண்டு துண்டாக வெட்ட வேண்டியபகுதிகளைக் கொண்டு பிறவற்றை நீக்குதல் நலமென்றுகருதுகிறார்கள். திருஷ்டாந்தமாக, தலைமயிரை கத்தரித்துக்கொள்ளுதல், சுருட்டுப் பிடித்தல், சாராயங் குடித்தல்,பெண்களைத் தம் இஷ்டப்படி பரபுருஷருடன் பேசவும்பழகவும் இடங்கொடுத்தல் - இவை போன்றனவெல்லாம்ஐரோப்பிய நாகரீகத்தின் கெட்ட லக்ஷணங்களென்றும்,ஆதலால் இவற்றை நாம் நீக்கிவிட வேண்டுமென்றும்,ஐரோப்பியரின் உழைப்பு, விடா முயற்சி, ஒற்றுமை,பொருள் சேர்ப்பதில் அவர்களுக்குள்ள திறமை இவைபோன்றவை யெல்லாம் அந்த நாகரீகத்தின் நல்லலக்ஷணங்களென்றும், ஆதலால் இவற்றை நம்மவர் கைக்கொள்ள வேண்டுமென்றும் நம்மவரிலே பலர் அடிக்கடிசொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், இங்ஙனம்"பேசுவோர் விஷயங்களை ஆழ்ந்து கவனியாமல் அவற்றின்புறத்தோலை மாத்திரம் கருதும் இயல்புடையார். ஏனென்றால்தலை மயிரை வெட்டுவதும், சுருட்டுப் பிடிப்பதும், சாராயங்குடிப்பதும் ஐரோப்பிய நாகரீகத்தின் தத்துவங்களல்லபுகையிலை மாத்திரம் தான் சில நூற்றாண்டுகளின் முன்புஅமெரிக்காவிலிருந்து புதிதாக வந்த சாமான். ஐரோப்பாமூலமாக அது உலக முழுவதையும் வியாபித்தது.ஐரோப்பியர் அதைச் சுருட்டாகப் பிடிக்கிறார்கள். நம்மவரும்அந்த வழக்கத்தை அங்ஙனமே கைக்கொண்டார். பலர்அப்படிக்கின்றி, கொஞ்சம் வைதிகமான ஜனங்கள் அதைவாய்ப் புகையிலையாகவும், மூக்குப் பொடியாகவும்உபயோகிக்கிறார்கள். மதுபானம் ஐரோப்பியரின்ஸஹவாஸத்தால் இந்நாட்டில் மிகுதியுற்றதென்பது மெய்யேயாயினும், அது ஐரோப்பியரால் புதிதாகக் கொண்டுநுழைக்கப்பட்ட வழக்கமன்று; புராதன கால முதலாகவேநமது தேசத்திலுள்ளது. ஷ்றீ கிருஷ்ண பகவானுடையசகோதரரும், அவதார புருஷரில் ஒருவருமாகிய பலராமர்பெருகுடியரென்றும், கிருஷ்ணனே சாதாரணமாகக் குடிக்கக்கூடியவரென்றும் பகவானுடைய மக்கள் குடிவெறி மிகுதியால்ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்தார்களென்றும்புராணங்கள் சொல்லுகின்றன. |