பக்கம் எண் :

மாதர் - தமிழ் நாட்டு மாதருக்கு

சுருட்டுப் பிடித்தல் முதலியன ஐரோப்பியநாகரீகத்தின் தத்துவங்களல்ல என்று மேலே சொன்னேன்.அவற்றை அங்ஙனம் பாவித்தல் வெற்றிலை போட்டுக்கொள்வதையும், மூக்குப்பொடி போட்டுக் கொள்வதையும்,உச்சநிலையில் காலணா அகலக்குடுமி வைத்துக்கொள்வதையும் ஹிந்துமதத்தின் மூல தருமங்களாகக்கருதும் மடமைக்கு நிகராகும். மேலும் இவற்றையும்ஐரோப்பாவின் ஸ்திரீகளுக்குள்ள அதிகஸ்வதந்திரங்களையும் ஒரே ஜாப்தாவில் சேர்த்துக்கணக்கிடுதல் மிதமிஞ்சிய அஞ்ஞானத்துக்கு லக்ஷணமாம்.ஏனென்றால், ஸ்திரீ ஸ்வதந்திரம் ஆத்ம ஞானத்தைஆதாரமாக உடையது. ஆண் பெண் எல்லாரும்சமானமென்பதும் பிறருக்குத் தீங்கு விளையாதவரையில்"ஆணுக்கும் பெண்ணுக்கும் தன்னிஷ்டப்படி யெல்லாம்நடக்கக்கூடிய அதிகார முண்டென்பதும் ஐரோப்பியநாகரீகத்தின் மூல ஸித்தாந்தங்கள். தலைமயிர்வெட்டிக்கொள்ளுதல் முதலியன ஸௌகர்யத்தையும்காலதேச வர்த்தமானங்களையும் தழுவியேற்படும் முக்கியதன்மையில்லாத புறநடைகள். சரீர ஸௌகரியங்களைக்கருதியும் அலங்காரத்தின் பொருட்டாகவும் ஒரு தேசத்தார்ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கங்கள். சில சமயங்களில்அந்த தேசத்தாருக்கு நன்மையாகவும் பிறருக்குத்தீமையாகவுமிருக்கலாம். சில சமயங்களில் இவர்களுக்கேகேடாக முடியினும் முடியலாம். இவற்றுள், அலங்காரத்தைக்கருதி ஏற்படும் உடை வழக்கங்களும், மயிர் வைத்துக்கொள்ளும் வழக்கங்களும் எந்த நாட்டிலும் சாசுவதமாகநிற்கக் கூடியவை அல்ல. அடிக்கடி மாறும் இயல்புடையன.ஒரு தேசத்திலேயே எல்லோரும் ஒரே மாதிரிஅலங்காரத்தை விரும்புவதில்ல. சிலருக்கு அலங்காரமாகத்தோன்றுவது சிலருக்கு விகாரமாகத் தோன்றக்கூடும்.திருஷ்டாந்தமாக, தமிழ் நாட்டில் பிராமணரும் வேறு சிலவகுப்பினரும் மீசையைச் சிரைத்துக் கொள்ளுகிறார்கள்.ஆனால் பெரும்பான்மையான தமிழ் மக்கள்மீசையில்லாமலிருப்பது விகாரமென்று நினைக்கிறர்கள்.இங்கிலாந்தில் நூறு வருஷங்களுக்கு முன்பு ஆண்பிள்ளைகள் தலைமயிரை கத்திரித்துக்கொள்ளும் வழக்கம்"கிடையாது. தலைமயிர் முழுவதையும் நீளமாக வளர்த்துவிடுதலே வழக்கமாகக் கொண்டிருந்தனர். தென்னிந்தியாவில்பெரும்பான்மையான பிராமணர் மீசை வைத்துக்கொள்வதில்லை. வேத பூமியாகிய ஆரியவர்த்தத்தில்,பிராமணர்கள் மீசையில்லாமல் இருப்பது சாஸ்திரவிரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன்மீசையைச் சிரைத்தால் அவருடைய நெருங்கிய சுற்றத்தாரில்யாரேனும் இறந்து போவதற்கடையாளமாகக் கருதப்படுகிறது.பல வருஷங்களில் முன்பு நான் காசியில் ஜயநாராயணகலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்துவாசிக்கப்போனேன். நான் தமிழ் நாட்டிலிருந்துசென்றவனாதலால் தமிழ் நாட்டின் பிராமணரின் வழக்கப்படிஅடிக்கடி முகக்ஷவரம் செய்து கொண்டிருந்தேன்.அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள்என்னை நோக்கி மிகவும் ஆச்சரியப்பட்டனர். எப்போதுபார்த்தாலும் இவன் மீசையை சிரைத்துவிட்டு வருவதின்காரணம் யாதென்று அவர்களுக்குள்ளே பலநாள்ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும்புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன்கேட்டுத் தீர்த்தான். ''உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரந்தவறாமல் செத்துப் போய்கொண்டிருக்கிறார்களா?'' என்றுஎன்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதின்"காரணத்தை அறிந்து கொண்டு 'அப்படியில்லையப்பா,தமிழ் நாட்டில் பிராமணர் மீசை வைத்துக்கொள்ளும்வழக்கமில்லை' என்று தெரிவித்தேன். ஆசாரங்களும்பழக்கங்களும் சில சமயங்களில் மதக் கொள்கைகளைஆதாரமாகக் கொண்டிருக்கக்கூடும். யதேச்சையாகவும்அங்ஙனமின்றி வெறுமே அர்த்தமில்லாமலும் தோன்றி நடைபெறவுங்கூடும். குடுமி வைத்துக் கொள்ளும் மாதிரிகள்இவை போன்ற சரீர அலங்கார சம்பந்தமான வழக்கங்களைநமது நாட்டின் பிற்காலத்தில் மதக் கொள்கைகளுடன்பிணைத்து ஸ்ம்ருதிகளிலே அவற்றைக் குறித்துச் சட்டம்போடத் தொடங்கினார்கள். இந்த பரிதாபகரமான தவறுதல்ஆதிகாலம் முதல் மற்ற நாடுகளிலும் ஏற்பட்டு வந்திருக்கிறது.சிறிது காலத்து முன்பு வரை சீனா தேசத்தார் 'பன்றிவால்'என்று சொல்லப்படும் தமது நீளக் குடுமியை மிகவும்வைதிகமாகவும் அதனை வெட்டி யெறிதல் பெரும்பாவமுமாகவும் கருதி வந்தார்கள். சில வருடங்களுக்கு முன்புஅந்நாட்டில் ராஜவம்சத்தின் ஆட்சி அழிந்து போய் குடியரசுஸ்தாபனம் செய்யப்பட்டபோது பதினாயிரம் லக்ஷக்கணக்கானசீனர் ஏககாலத்தில் குடுமிகளை வெட்டியெறிந்தனர். அந்தரோமங்கள் ஆயிரக்கணக்கான வண்டிகள் நிறைய ஏற்றப்பட்டுவியாபாரத்துக்காக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.இவ்விஷயத்தை நான் இவ்வளவு நீட்டாக சொல்ல வந்ததின்காரணம் யாதென்றால் இத்தகைய புற ஆசாரங்களைப்பாதுகாக்கும் விஷயத்தில் நமது தேசத்து மாதர் மிதமிஞ்சியகவலை செலுத்துவதை மாற்ற வேண்டுமென்ற நோக்கம்.