''மானமிழந்தபின் வாழாமை முன்னினிதே.''கல்விகூட அத்தனை பெரிதில்லை, தைரியம் வேண்டும். எதுவரினும் நம்மைப் பிறர் தாழ்வாகக் கருதவும் தாழ்வாகநடத்தவும் இடங்கொடுக்கக் கூடாது என்ற மன உறுதிவேண்டும். ஐரோப்பிய நாகரீகத்தின் புறத் தோற்றங்களிலேஆக்ஷேபத்துக்கு இடமான அம்சங்கள் பலவும் இருக்கின்றனஎன்பதில் ஸந்தேகமில்லை. ஆனால் இஃதுவியக்கத்தக்கதொரு செய்தியன்று. நமது ஸநாதன ஹிந்துதர்மத்தின் புறநடைகளிலேகூடப் பல வெறுக்கத்தக்கஅம்சங்கள் வந்து கலந்துதான் கிடக்கின்றன. அதுபற்றி"ஐரோப்பிய நாகரீகத்தையே வெறுத்தல் சால மிகப் பெரியபேதைமையாம். நம்முடைய ஹிந்து தர்மமாகிய வேததர்மத்துக்கு ஐரோப்பிய நாகரீகம் தனது தத்துவ நிலையில்விரோதமன்று. அதன் உள்நிலை, நான் மேலே குறிப்பிட்டபடி,நமது ஹிந்து தர்மத்துக்குப் பெருத்துணையாக அமைந்திக்கிறது. ஸர்வ ஜீவ ஸமத்வம் எல்லா உயிர்களும்தம்முள்ளே நிகர் என்பது, ஸர்வ ஜீவ ஐக்கியம் - எல்லாஉயிர்களும் ஒன்றென்பது, இவையே ஸநாதன ஹிந்துதர்மத்தின் வேர்க்கொள்கைகள். இவற்றை மனிதர் எப்போதும்தம்முடைய நினைப்புகளில் செயல்களில் விளங்கச் செய்யும்போதுதான் ஹிந்து மதத்துக்கு உண்மையான வெற்றி ஏற்படும்.இக்கொள்கையின் ஒரு சிறு அம்சத்தையே ஐரோப்பியநாகரீகம் தனக்கு ஆதாரமாக உடையது. எல்லா ஜந்துக்களும்நிகரென்பது இறுதியான உண்மை. மனிதரெல்லாரும்தம்முள்ளே ஸமானராவாரென்பது இவ்வுண்மையின் ஒரு சிறுபகுதி. இந்தப் பகுதியுண்மையை நிலைநிறுத்தவேண்டுமென்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உட்கருத்து. ஆனால், ஆழ்ந்த உண்மைகளைக் கண்டுப்பிடிப்பதில் நாம் ஐரோப்பியரைக் காட்டிலும் மிகமிகஉயர்ந்திருக்கிறோமெனினும், அவற்றை அனுஷ்டானத்துக்குக்"கொண்டு வருவதில் நம்மைக் காட்டிலும் அவர்கள் அதிகஊக்கம் செலுத்துகிறார்கள். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு ஆகாது.அனுஷ்டானத்துக்கு வராத ஞானத்தை ஞானமென்று சொல்வதேபிழை. ஆகவே, பூமி முழுமைக்கும் பெருந்துணையாக நின்றுமனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றக் கூடிய ஹிந்து மதத்தின் ஸாரஉண்மைகளை நாம் ஒழுக்கத்தில் காண்பிக்க வேண்டும்.இங்ஙனம் காண்பிக்கும்படி நம்மவரைத் தூண்டி வழிகாட்டும்கடமையும் தகுதியும் நம்முடைய மாதர்களுக்கே உரியன.இதனை ஸாதிப்பதற்குரிய உபாயங்களைக் குறித்து மற்றொருமுறை எழுதுகிறேன். |