மலையாளத்திலோ, மாதர்கள் மிக உயர்ந்தசுதந்திர முடையோர்களாக யிருப்பது மட்டுமேயன்றிசொத்துடைமை அங்கு பெண் சந்ததியாருக்குஏற்பட்டிருக்கிறது, இவ்விதமான மலையாள நாகரீகத்துள்நெருங்கிப் பழகி ஊடாடிக்கொண்டு வந்திருப்பதினின்றும்,தமிழ்நாட்டு நாகரீகமும் இங்குள்ள மாதர்களுக்கு - ஹிந்துதேசத்தின் மற்றப் பகுதிகளிலுள்ள மாதர்களைக் காட்டிலும்- அதிக ஸ்வதந்திரம் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறது.முகம்மதிய நாகரீகத்தின் ஆதிக்கம் பலமடைந்ததினின்றும்,வட இந்தியாவில், மேல்ஜாதி ஹிந்து ஸ்திரீகளை கோஷாஎன்ற முகம்மதிய வழக்கத்தைக் கைகொள்ளும்படி ஏற்பட்ட"காலத்திலேகூட, தமிழ் நாட்டிலும் அதன் நாகரீகத்தைத்தழுவிய தெலுங்கு, கன்னடம் முதலிய நாடுகளிலும் அந்தவழக்கம் உண்டாகவில்லை. மேலும் உலகத்திலுள்ள மாதர்களுக்கெல்லாம்நீதி ஆண்மக்களாலேயே விதிக்கப்பட்டது. தமிழ் நாட்டுமாதரும் ராஜநீதி சம்பந்தப்பட்ட சிறிதளவிலே பொதுவானஆண் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தனரேயாயினும், ஜனஸமூஹ நீதிகளின் விஷயத்தில் தமிழ் நாட்டில்எப்போதும் ப்ரமாணமாக இயன்றுவருவது ஓளவையின் நீதிவாக்கியங்களும் நீதி நூல்களுமேயாம். ஆண்மக்களிலேகூடஉயர்ந்த கல்வி பயின்றோர் மாத்திரமே ஜன ஸமூஹவிதாயங்களில் வள்ளுவர் குறள், நாலடியார் முதலியவற்றைப்ரமாணமாகக் கூறுவர். அதிகப் படிப்பில்லாதவர்களும்,படிப்பே தெரியாதவர்களுமாகிய ஜனங்கள் ஆண் பெண்அனைவருக்கும் ஒளவையாரின் நீதியே வழிகாட்டி. தமிழ்ஜனங்களில் பெரும்பான்மையோருக்குச் சுமார் சென்றஇரண்டாயிரம் வருஷங்களாக ஓளவையாரின் நீதியேப்ரமாணமாக நடை பெற்று வருகின்றது. ஸாமான்ய ஜனங்கள் ஓளவை நீதியைக்"கொண்டாடி வருகிறார்களெனில், கற்றோரும் அரசரும் அதைப்புறக்கணித்து வந்தார்களென்று கருதுதல் வேண்டா. கற்றோருக்கும்அரசர்க்கும் தமிழ் மக்கள் எல்லோருக்கும் குறள், நாலடியார்முதலிய நூல்களைக் காட்டிலும் ஒளவையின் நூல்களில் அகப்பற்றுதலும் அபிமானமும் இருந்து வருகின்றன. ஆனால், இந்தநீதி நூல்கள் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்தமுதல் ஓளவையார் இயற்றப்பட்டன அல்ல வென்றும் சுமார்ஆயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த இரண்டாம்ஓளவையால் செய்யப்பட்டன என்றும் ஒரு கட்சியார்சொல்லுகிறார்கள். ஓளவையார் வெறுமே நூலாசிரியர் மட்டுமல்லர்.அவர் காலத்திலேயே அவர் ராஜ நீதியில் மிகவும் வல்லவரென்றுதமிழ் நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராஜாங்கத்தூதில் நியமனம் பெற்றிருக்கிறார். மேலும் அவர் சிறந்த ஆத்மஞானி; யோகசித்தியால், உடம்பை முதுமை, நோவு, சாவுகளுக்குஇரையாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார். 'மாசற்ற கொள்கை மனத்தமைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு' |