அதாவது, ஹிருதயத்தில் சுத்தமான, பயமற்ற,கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களைநிறுத்திக் கொண்டால், உடம்பில் தெய்வத்தன்மை,அதாவது சாகாத்தன்மை, (அமரத் தன்மை) விளங்கும்என்றும் பொருள் படுவது. இந்தக் குறள் பாடியவர்ஓளவையார். இவர் தாமே நெடுந்தூரம் இக்கொள்கைப்படிஒழுகியவரென்பது இவருடைய சரித்திரத்தில் விளங்குகிறது. ஒரு தேசத்தின் நாகரீகத்துக்கு அந்த தேசத்தின்இலக்கியமே மேலான அடையாளமென்று முந்திய"வியாசத்தில் சொன்னேன். திருஷ்டாந்தமாக ஆங்கிலேயநாகரீகத்துக்கு ''ஷேக்ஸ்பியர்'' முதலிய மஹா கவிகளின்நூல்களே அளவுக் கருவியாக கருதப்படுகின்றன. ''நாங்கள்இந்தியா தேசத்து ராஜ்யாதிகாரத்தை இழக்க ஒருப்பட்டாலும்ஒருப்படுவோமே யன்றி ஷேக்ஸ்பியரை இழக்க ஒருநாளும்ஒருப்படமாட்டோம்'' என்று நாம் மறுமொழிசொல்வோமென்று ''மெக்காலே'' என்னும் ஆங்கிலேயஆசிரியர் சொல்லுகிறார். இந்த மாதிரியாகப் பெருமைப்படுத்தி நம்மவர்கம்பனைச் சொல்லலாம்; திருவள்ளுவரைச் சொல்லலாம்;சிலப்பதிகார மியற்றிய இளங்கோவடிகளைக் கூறலாம்;இன்னும் பல புலவர்களைக் காட்டலாம். எனினும், கம்பர்,திருவள்ளுவர் முதலிய பெரும் புலவராலேயேதம்மனைவரிலும் மிகச்சிறந்தவராகக் கருதப்பட்ட ஓளவைப்பிராட்டியையே மிகவும் விசேஷமாக எடுத்துச் சொல்லக்கூடும்.'தமிழ் நாட்டின் மற்றச் செல்வங்களை யெல்லாம் இழந்துவிடப் பிரியமா?ஓளவையின் நூல்களை இழந்துவிடப்பிரியமா?'என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், 'மற்றச்செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும்பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும்சமைத்துக்கொள்ள வல்லது. ஓளவைப் பிராட்டியின் நூல்களைஇழக்க ஒருபோதும் சம்மதப்படமாட்டோம், அது மீட்டும்சமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்' என்று"நாம் மறுமொழி உரைக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டு நாகரீகத்துக்கு அத்தனை பெரும் செல்வமாகவும்,இத்தனை ஒளி சான்ற வாடா விளக்காகவும் தனிப்பேரடையாளமாகவும் தமிழ் மாதொருத்தியின் நூல்கள்விளங்குவது நமது நாட்டுக்கு ஸ்திரீகளுக்குப் பெரு மகிழ்ச்சிதரத்தக்கதொரு செய்தியன்றோ? இது தமிழ் ஸ்திரீகளுக்குவெறுமே புகழ் விளைவிப்பது மாத்திரமன்று. அவர்களுக்குகிரமமான காவலுமாகும். ஓளவையார் பிறந்த நாட்டு மாதரை,ஓளவையார் இனத்து மாதரை, ஆண் மக்களைக் காட்டிலும்அறிவிலே குறைந்த கூட்டத்தாரென்று வாய் கூசாமல் எவனும்சொல்லத் துணிய மாட்டான். மற்ற தேசங்களில், திருஷ்டாந்தமாக இங்கிலாந்து தேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே ஆண் மக்களுக்கு சமானமானஉரிமைகளைப் பெண்களுக்குக் கொடுப்பது தகாதென்று வாதம்பண்ணுகிற கக்ஷியார், மாதர்கள் இயற்கையிலேயே ஆண்மக்களைக் காட்டிலும் அறிவில் குறைந்தவர்களென்றும்,ஆதலால் வீட்டுக் காரியங்களுக்கே அவர்கள்தகுதியுடையோராவாரல்லது அறிவு வன்மையால் நடத்தவேண்டிய நாட்டுப் பொதுக் காரியங்களை நிர்வகிக்கஅவர்களுக்குத் திறமை கிடையாதென்றும் தர்க்கிக்குமிடத்தே,அதற்கு ஒரு ஸாக்ஷ்யமாக, 'ஆண் மக்களில் க்ஷேக்ஸ்பியர்என்னும் கவியரசர் எழுதியிருப்பது போன்ற கவிதை எழுதும்திறமை கொண்ட ஸ்திரீ ஒருத்தி நமது நாட்டில்"எப்போதேனும் தோன்றியிருப்பதுண்டா?ஏன் தோன்றவில்லை?இதனால் இயற்கையிலே ஸ்திரீகள் ஆண் மக்களைக்காட்டிலும் புத்தியில் குறைந்த வாகளென்பது தெளிவாகவிளங்குகிறதன்றோ?' என்கிறார்கள். |