பக்கம் எண் :

மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்

தமிழ் நாட்டிலோவெனில், இப்படிப்பட்ட வாதம்செல்லாது. அதற்கு நேர் எதிரிடையாக இந்நாட்டில் ஸ்திரீகள்:- ''ஓளவையாரைப் போல் கவிதையும் சாஸ்திரமும்செய்யக்கூடிய ஓர் ஆண் மகன் இங்கு பிறந்திருக்கிறானா?ஏன் பிறக்கவில்லை? இதினின்றும் ஆண் மக்கள்இயற்கையிலேயே பெண்களைக் காட்டிலும் அறிவுத்திறமையில் குறைந்தவர்களென்பது தெளிவாகவிளங்குகிறதன்றோ?'' என்று வாதிக்கக்கூடியநிலைமையிலிருக்கிறார்கள்.

மகிமை பொருந்திய ஆத்ம ஞானியாகிய"ஓளவையார் இயற்றியிருக்கும் 'ஓளவை குறள்' என்ற ஞானநூல் தமிழ் நாட்டு யோகிகளாலும் சித்தர்களாலும்உபநிஷத்துக்களுக்குச் சமானமாகப் போற்றப்பட்டுவந்திருக்கிறது. யோக சாஸ்திரத்துக்கும் மோக்ஷசாஸ்திரத்துக்கும் இந்நூல் முக்கிய பாடங்களில் ஒன்றாகக்கருதத்தக்கது. மேலும் யோகாநுபூதி ஸம்பந்தமாகப் பிறர்எழுதுமிடத்தே மிகவும் கடினமும் அஸாதாரணமுமாகியசொற்களையும் வாக்கியங்களையும் வழங்குதல்இன்றியமையாததென்ற கருத்துடன் வேலை செய்திருக்கிறார்கள்.ஓளவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாகஎழுதப்பட்டிருக்கின்றது. 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்'என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில்ஓளவை ஒப்பற்றவள். இத்துடன் மிகவும் அருமையானநுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படிமிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புதத் தொழிலைஉயர்ந்த கவியரசர்களே தெய்வீகத் தொழில் என்றும்தெய்வசக்தி பெறாத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப்படாததொழில் என்றும் கருதுகிறார்கள். இந்த அற்புதத் தொழிலிலும்ஓளஅவை நிகரற்ற திறமை வாய்ந்தவள்.

புருஷார்த்தங்கள், அதாவது மானிட ஜன்மம்"எடுத்ததினின்றும் ஒருவன் அடையக்கூடிய மிக உயர்ந்தபயன்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில்வீடு என்று சொல்லப்படும் முக்தி வாக்குக்கும் மனதுக்கும்எட்டாதாகையால், அதனை விரித்துக் கூற முயலாமல்,அதற்குச் சாதனமாகிய தெய்வபக்தியை மாத்திரம் முதல்அத்யாயத்தில் கூறி நிறுத்திவிட்டு, மற்ற மூன்று புருஷார்த்தங்களையும் விளக்கி, திருவள்ளுவ நாயனார் ''முப்பால்'' (மூன்று பகுதிகளுடையது) என்ற பெயருக்குதிருக்குறள் செய்தருளினார். ஆயிரத்து முன்னூற்று முப்பதுசிறிய குறட்பாக்களில் நாயனார் அறம், பொருள், இன்பம்என்ற முப்பாலையும் அடக்கிப் பாடியது மிகவும் அபூர்வமானசெய்கை என்று கருதப்பட்டது. இது கண்ட ஓளவைப்பிராட்டிவீட்டுப்பாலையும் கூட்டி நான்கு புருஷார்த்தங்களையும் ஒரேசிறிய வெண்பாவுக்குள் அடக்கிப் பாடினார். இந்தஆச்சரியாமான வெண்பா பின்வருமாறு:

''ஈதலறம்; தீவினை வீட்டீட்டல் பொருள்; எஞ்ஞான்றும்
       காதலிருவர் கருத்தொருமித் - தாதரவு    
       பட்டதே இன்பம்; பரனை நினைந்திம் மூன்றும்
       விட்டதே பேரின்ப வீடு.''