பக்கம் எண் :

மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்

இவ் வெண்பாவின் கருத்து யாதெனில், ஈதலாவதுஅருள் செய்தல் அல்லது கொடுத்தல் என்றும் பொருள்படும்.அதாவது, உலகத்தாருக்குப் பயன்படும் வண்ணமாக நம் உடல்,பொருள், ஆவி மூன்றையும் தத்தம் பண்ணிவிடுதல்: நமதுபொருளாலும், வாக்காலும், மனத்தாலும், உடற் செய்கையாலும்,"பிறருடைய கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கினியன செய்தல்;பொருள் கொடுப்பது மாத்திரமே ஈகையென்று பலர் தவறாகப்பொருள் கொள்ளுகிறார்கள். பிறர் பொருட்டாக நம் உயிரைக்கொடுத்தல் கொடையன்றோ?  வைத்தியம் முதலியசிகிச்சைகளால் பிறருக்கும் பிராணதானம் செய்தல் ஈகையன்றா?பொருள் முதலிய நலங்களை யெல்லாம் ஒருவன் தனக்குத்தானேசேகரித்துக்கொள்ளக் கூடிய திறமை அவனுக்கு ஏற்படும்படி அவனுக்குக் கல்வி பயிற்றுதல் தானமாகாதா?

எனவே, கைம்மாறு கருதாமல் பிறருக்குஎவ்விதத்திலேனும் செய்யப்படும் கஷ்ட நிவாரணங்களும்அனுகூலச் செயல்களும் ஈகை எனப்படும். இதுவே மனிதனுக்குஇவ்வுலகத்தில் அறம், அல்லது தர்மம், அல்லது கடமையாம்.இனி, தீயசெயல்கள் செய்யாதபடி, எவ்வகைப்பட்ட அறிவுமுயற்சியாலேனும் சரீர முயற்சியாலேனும் சேகரிக்கப்படும் உணவு,"துணி முதலிய அவசியப் பண்டங்களும், குதிரை வண்டிகள்,ஆபரணங்கள், வாத்தியங்கள், பதுமைகள் முதலிய சௌக்கியவஸ்துக்களும், இவற்றை அனுபவிப்பதற்குச் சாதனங்களாகியவீடு, தோட்டம் முதலியனவும், இப்பண்டங்களுக்கெல்லாம்பொதுக் குறியீடும் பிரதியுமாக மனிதரால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கும் பொற் காசு, வெள்ளிக்காசு, காகிதப் பணம்முதலியனவும், செல்வம் அல்லது அர்த்தம் எனப்படும்நற்செயல்களாலே சேர்க்கப்படும் பொருளே இன்பத்தைத்தருவதாகையாலும், தீச் செயல்கள் செய்து சேர்க்கும் பொருள்பலவிதத் துன்பங்களுக்கு ஹேதுவாய் விடுமாகையாலும்,தீவினைகள் விட்டுச் சேர்ப்பதே பொருள் என்னும் பெயர்க்குரியதென்றும் தீவினைகளாலே சேர்ப்பது துன்பக் களஞ்சியமே யாகுமென்றும் ஓளவையார் குறிப்பிட்டருளினார்.

இனி, இன்பத்துக்கு ஓளவையார் கூறும் இலக்கணமோநிகரற்ற மாண்புடையது. காதலின்பத்தையே முன்னோர்இன்பமென்று சிறப்பித்துக் கணக்கிட்டனர். பொருளைச்"சேர்ப்பதிலும் அறத்தைச் செய்வதிலும் தனித்தனியே பலவகையான சிறிய சிறிய இன்பங்கள் தோன்றும். ஆயினும் இவைகாதலின்பத்துக்குத் துணைக் கருவிகளாவது பற்றியே ஒருவாறுஇன்பங்களென்று கூறத் தக்கனவாம். உலகத்தில் மனிதர் ருசியானபதார்த்தங்களை உண்டல், நல்ல பாட்டுக் கேட்டல், நல்லமலர்களை முகர்தல் முதலிய இந்திரிய இன்பங்களை விரும்பிஅவற்றை அடையும் பொருட்டு மிகவும் பாடுபடுகிறார்கள். அதிகாரஇன்பம், புகழின்பம் முதலிய எண்ணற்ற வேறு பலஇன்பங்களுக்காகவும் உழைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம்அற்பமான இன்பங்களென்று கருதி முன்னோர் இவற்றைஇன்பப்பாலிலே சேர்க்கவில்லை. புகழ் அதிகாரம் முதலியவற்றைஅறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சார்ந்தனவாகக்கணித்தார்கள். இந்திரிய இன்பங்களுக்குள்ளே இனியபக்ஷணங்களையும் கனிகளையும் உண்டல், மலர்களை முகர்தல்முதலியன மிகவும் எளிதிலே தெவிட்டக் கூடியனவும், வெறுமேசரீர சுகமாத்திரமன்றி ஆத்ம சுகத்துக்கு அதிகஉபகாரமில்லாதனவுமாதல் பற்றி அவற்றையும் இன்பப்பாலிலேசேர்க்கவில்லை.

'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
       ஒண்டொடிக் கண்ணேயுள'

என்று திருவள்ளுவர் பாடியிருக்கிறார்.