அதற்கு நான்:- ''ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்லாம் ஒரே பாஷைதான். முகலாயராஜாக்கள் பாரசீக பாஷையிலே தான் பெரும்பாலும்ஆரம்பத்தில் விவகாரம் நடத்திவந்தார்கள். பின்னிட்டுஅவர்கள் தமக்கும் தம்முடைய பரிவாரங்களுக்கும் இந்ததேசத்துப் பாஷையாகிய ஹிந்தியைப் பொது பாஷையாகக்கைக்கொண்டார்கள். ஹிந்தி பாஷை ஸம்ஸ்கிருதத்திலிருந்துபிறந்தது. அது ஸம்ஸ்கிருத பாஷை சிதைவு. அதைஹிந்துக்கள் தேவ நாகரியில் எழுதி ஸ்வம்யம்புவாகப்பேசுகிறார்கள். அதையே பார்ஸி லிபியில் எழுதிக் கொண்டுபல பார்ஸி அரபி மொழிகளைக் கலந்து முஸல்மான்கள்பேசியபோது அதற்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது என்றுபெயர் வழங்கினார்கள். உருது என்றால் கூடார பாஷை யென்று அர்த்தம். அதாவது, மொகலாய ராஜ்யத்தின் சேனைகள் கூடாரம் அடித்துக்கொண்டு பல தேசத்துப் போர்வீரர்கள் கலந்திருக்கையில் அங்கு தோன்றிய கலப்பு பாஷைஎன்று பொருள். எனக்கு ஹிந்தி தான் மிகவும் நன்றாகத் தெரியும். எனிலும் ஹிந்துஸ்தானி அல்லது உருது மேற்படிஹிந்தி பாஷையில் பார்ஸி அரபிச் சொற்கள் சேர்ந்ததேயாகுமாதலால் தான் இதிலும் நல்ல பழக்கமுடையவனானேன்.இது நிற்க. ''நீ வருத்தப்பட்டுக்கொண்டிருந்த காரணம் யாது?''என்று மறுபடியும் என்னை அறியாமலே கேட்டேன். இதுகேட்டு அந்த முகம்மதியப் பிரபு சொல்லுகிறான்:- ''சுவாமி, உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயேஎனக்கு உங்களிடம் விசுவாசம் உண்டாகிறது. உங்களிடம்சொன்னால் என் துக்கத்திற்கு நிவர்த்தி உண்டாகுமென்று என்மனதில் ஒருவித நிச்சயம் தோன்றுகிறது. என் துயரம் சாதாரணமாக மற்றவர்களிடம் சொல்லக்கூடியதன்று. எனினும்உங்களிடம் சொல்லலாமென்று நினைத்துச் சொல்லுகிறேன்.என் துயரத்தைத் தீர்த்து விட்டால் உங்களுக்கு மிகுந்தபுண்ணிய முண்டு. இந்த உபகாரத்தை நான் இறந்து போகும்வரை மறக்க மாட்டேன்'' என்றான். ''முதலாவது உம்முடைய கஷ்டத்தைச் சொல்லும்.தீர்க்க வழி கிடைத்தால் தீர்த்து விடுகிறேன்'' என்றேன். |