பக்கம் எண் :

மாதர் - ரெயில்வே ஸ்தானம்

அப்போது அம் முகம்மதியப் பிரபு பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்:

''எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார்,பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும்.நான் பிறந்தது வடக்கே ஹைதராபாத் நகரம். சிந்துமாகாணத்து ராஜதானியாகிய ஹைதராபாத் அன்று. நிஜாம்அரசரின் ராஜதானியாகிய ஹைதராபாத் நகரம். நான் என்பிதாவுக்கு ஒரே பிள்ளை. நான் பிறக்கும் போது என் பிதாமிகவும் ஏழையாக இருந்தார். நான் பிறந்து சில வருஷங்களுக்குப் பின் எங்கள் ராஜ்யத்தில் ஒரு பெரிய 'லாட்டரி' ஏலச் சீட்டுப் போட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா யாரிடமிருந்தோ 10 ரூபாய் "கடன் வாங்கி அனுப்பினார். அதிர்ஷ்டம் அவருக்கிருந்தது. அவருடையதரித்திரத்தை நாசம் பண்ணிவிட வேண்டுமென்று அல்லாதிருவுளம் பற்றினார். ஒரு கோடி ரூபாய் சீட்டு அவருக்குவிழுந்தது. பிறகு அவர் அதைக் கொண்டு சில வியாபாரங்கள் நடத்தினார். அந்த வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைக்கத் தொடங்கி சிலவருஷங்களுக்குள்ளே ஏழெட்டுக் கோடிக்கு அதிபதியாய் விட்டார். அப்பால் சற்றே நஷ்டம் வரத்தொடங்கிற்று. என்பிதா நல்ல புத்திமான். நஷ்டம் வரத்தொடங்கிய மாத்திரத்திலேதிடீரென்று வியாபாரங்களை யெல்லாம் நிறுத்திக்கொண்டு,பணங்களைத் திரட்டி ஏராளமான பூஸ்திதிகள் வாங்கி அவற்றினிடையே மாளிகை கட்டிக்கொண்டு தம்மால் இயன்றவரை பரோபகாரத்தில் ஈடுபட்டவராய் வாழ்ந்து வந்தார். நான்பதினைந்து வயதாக இருந்தபொழுது அவர் இறந்து போய்விட்டார். நான் ஒரே பிள்ளையாதலால் அவர் சொத்தெல்லாம்எனக்கு வந்து சேர்ந்தது. என் வீட்டு மேற்பார்வை செய்யஎனது சிறிய தகப்பனார் நியமிக்கப்பட்டிருந்தார். என் தந்தைஇறக்குந் தறுவாயில் சிறிய தகப்பனாருக்குச் சில லக்ஷங்கள்பெறக்கூடிய பூமி இனாம் கொடுத்தது அன்றி, என்னைப்பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார், முதலாவது வேலையாக, தம்முடைய குமாரத்திகளை எனக்கே மணம்புரிவித்தார். என் பிதா இறந்து இரண்டு வருஷங்கள் ஆகுமுன்னரே, மேற்படி விவாகம் நடைபெற்றது. என் சிறியதகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண்பிரஜை தான் அவருக்குண்டு. ஆகவே என்னுடைய சொத்துவெளிக் குடும்பங்களுக்குப் போய்விடக்கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார். இந்த விவாகம் "என்தாயாருக்குச் சம்மதமில்லை. அவள் தன்னுடைய வகையில் ஒரு அழகான பெண்ணை எனக்கு மணம் புரிவிக்க விரும்பினாள். அதை விட்டு நான் சிறிய தகப்பனாரின் பெண்களை விவாகம் செய்துகொண்டாலும் அவர்களில் யாரேனும் ஒரு பெண்ணை மாத்திரம் மணம் செய்து கொல்வதே சரியென்றும் ஒரேயடியாக மூவரையும் மணம்புரிவது கூடாதென்றும் என் தாய் வற்புறுத்தினாள். இதினின்றும் என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும் மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது. சிறிய தகப்பனார் என்னைத் தனியாக வேறே ஊருக்கு அழைத்துக்கொண்டுபோய் அங்கு என் தாயாருடைய அனுமதியில்லாமலேவிவாகத்தை முடித்து வைத்து விட்டார். சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார் என் செய்கையாலே ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலே உயிர் துறந்து விட்டாள்.சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது.சொத்து விஷயங்களை நான் கவனிப்பதே கிடையாது.எல்லாம் அவர் வசத்தில் விட்டு விட்டேன். அவரும் என்சொத்தில் தம்மால் இயன்றவரை இரண்டு மூன்று வருஷங்களுக்குள்ளே அறுபத்தேழு லக்ஷம் - கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை - தாஸிகளின் விஷயத்திலும்குடியிலும் நாசம் பண்ணிவிட்டு கடைசியில் குடி மிகுதியால்குடல் வெடித்துச் செத்துப்போனார். பிறகு என் சொத்தை யெல்லாம் நிர்வகிக்க வேண்டிய கடமை என்னைப் பொறுத்ததாயிற்று. சரி. இந்த விஷயத்தை விஷ்தாரமாகச் சொல்வது என்னுடைய நோக்கமன்று. சொத்துக் கொஞ்சம்நஷ்டமானதில் எனக்கு அதிகக் கஷ்டமில்லை. இதனிடையேஎன்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும் பாடு சொல்லுந் தரமன்று. அதோ - பார்த்தீர்களா?  ஸ்டேஷனுக்குப்பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் "கூட்டம்தெரிகிறதன்றோ?  நடுவே யிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக் கொருத்தியாகமுகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தமாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மனவொற்றுமை யில்லையென்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா?  இவர்களில்மூத்தவள் பெயர் ரோஷன். அவளுக்கு வயது இருபத்திரண்டு.அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவளுக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. அவளுக்கு வயது பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால்குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம்வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்குச் சம்மதியில்லை. அவளுக்குஒரு நகை வாங்கிக் கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச் சட்டை வாங்கிக் கொடுத்தால் "