பக்கம் எண் :

மாதர் - முகமதிய ஸ்திரீகளின் நிலைமை

இரண்டு தினங்களுக்கு முன்பு என்னுடைய முகம்மதிய நண்பர் ஒருவர் என்னைப்பார்க்கும் பொருட்டு வந்திருந்தார். இவர் இஸ்லாம்மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றுதல் உடையவர். எதிர்காலத்தில் இஸ்லாம் மதம் மிகுந்த மகிமையும் ஒளியும்உடையதாய் உலகத்துக்கு எண்ணிறந்த நன்மைகள் செய்யப்போகிறதென்று இவர் உறுதியாக நம்புகிறார்.இவரது நம்பிக்கை நிறைவேறு மென்பதற்கு பலஅடையாளங்கள் இக் காலத்தில் உலகமெங்கும் பலஅடையாளங்கள் இக் காலத்தில் உலகமெங்கும் தோன்றுவதால், நானும் இவருடைய கருத்தை அங்கீகாரம்செய்கிறேன். ஆதலால், இவருக்கும் எனக்கும் மிகுந்தநட்பேற்பட்டு வளர்ந்து வருகிறது.

இவர் அன்று மாலை என்னிடம் முதலாவதுகேட்ட கேள்வி:-

''சென்ற 22-5-20-ல் சுதேசமித்திரன் பத்திரிகை7-ம் பக்கத்தில் `ரெயில்வே ஸ்தானம்? என்றொரு கதைஎழுதியிருந்தீர்களே''  அது மெய்யாகவே நடந்த விஷயமா''வெறும் கற்பனைக் கதை தானா?'' என்றார்.

''வெறும் கற்பனை'' என்று நான் சொன்னேன்.

'என்ன கருத்துடன் எழுதினீர்?''  என்று அவர் கேட்டார்.

அதற்கு நான்:-  ''பொதுவாக நான் கதைகளெழுதும் போதும், வெறுமே கற்பனை நயத்தைக் கருதிஎழுதுவது வழக்கமேயன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. தர்மபோதனைக்கு வியாஸங்களெழுதுவானேன்''கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன். எனிலும் என்னை மீறியே கதைகளிலும்பெரும்பாலும் தர்மபோதனைகள் வந்து நுழைந்து விடுகின்றன.அவ்வாறே இந்த ''ரெயில்வே ஸ்தானம்'' என்ற கதையிலும்ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பலமாதரை மணம்புரிந்து கொண்டால் அதினின்றும் அவனுக்குக்கஷ்டம் தான் விளையுமென்பதும், விவாகத்தில் ஒருவன்இன்பம் காணவேண்டினால் அவன் ஒருத்தியை மணம்செய்துகொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல்செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படி கதையினால்குறிப்பிடப்படும் உண்மைகளாகும்? என்றேன். அப்போது அந்த முஸ்லீம் நண்பர்:-  ''அந்தக் கதையில் ஒரு பிழைஇருக்கிறது'' என்றார்.

"என்ன பிழை?" என்று கேட்டேன்.

''அக் கதையில் ஒரு முகம்மதியப் பிரபு மூன்றுசகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண்களை மணம் புரிந்துகொள்ளுதல் முகம்மதிய சாத்திரப்படி ''ஹராம்'' (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடனிருக்கையில்அவளுடன் பிறந்த மற்ற ஸ்திரீயை ஒரு முஸ்லீம் மணம்புரிந்துகொள்ளக்கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின்கொள்கை'' என்று அந்த முகம்மதிய நண்பர் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் நான்:-  ''சரிதான், எனக்குஅந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்குளுக்குள்ளேஉண்டாதலால், அதுபோலவே முகம்மதியர்களுக்குள்ளேயேஇருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதி விட்டேன். எனவே அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப்பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம்புரிவித்தானென்பதை மாற்றித்தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தானென்று திருத்தி வாசிக்கும்படி ''சுதேச மித்திரன்''பத்திரிகையில் எழுதி விடுகிறேன்'' என்றேன். (ரெயில்வேஸ்தானம்? என்ற கதையில் நான் மேலே கூறிய சாதாரணத்தவறு புகவிட்டது பற்றி பத்திராதிபரும் பத்திரிகை படிப்போரும் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். உலகமெல்லாம் மாதர்களுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற கிளர்ச்சி நடப்பதை அனுசரித்துமுஸ்லீம்களும் ஏக பத்தினி விரதம், பெண் விடுதலை,ஆண் பெண் சமத்துவம் என்ற கொள்கைகளைப் பற்றிமேன்மை அடைய வேண்டுமென்பதே என் கருத்து. இந்தக் கருத்து நிறைவேறும்படி பரமாத்மாவான அல்லாஹூத்த ஆலா அருள் புரிவாராக).