பக்கம் எண் :

கலைகள் - சந்திரத் தீவு்

அப்போது ஸுதாமன் சொல்லுகிறான்:- ''மாம்ஸ போஜனம் ஜந்துக்களுடைய இயற்கை; ஆதலால், பாவமாகாது. மனிதன் மாத்திரந்தானா மாம்ஸம் தின்னுகிறான்? மனிதனைப் புலி தின்னவில்லையா?  சிங்கம், புலி, கரடி, நாய், நரி முதலிய மிருகங்களெல்லாம் அஹிம்ஸா விரதத்தைக் "கைக்கொண்டிருக்கின்றனவா? கொக்கு மீனைத் தின்னவில்லையா? பெரிய மீன் சிறு மீனை விழுங்கவில்லையா?பருந்து கோழியைத் தின்னவில்லையா?  காக்கை பூச்சிகளைத் தின்னவில்லையா?குருவி புழுக்களை உண்ணவில்லையா?புழுக்கள் ஒன்றை யொன்று பக்ஷிக்கவில்லையா?' என்றான். அதற்குச் சந்திரத் தீவின் மந்திரியாகிய ராஜகோவிந்தன் சொல்லுகிறான்:- 'ஜீவஹிம்ஸை பொது நியாயமென்று சொல்லுதல் தவறு. யானை மாம்ஸந்தின்னாது. மாடு தின்னாது. மான் தின்னாது. குரங்கு தின்னாது. ஒட்டகை தின்னாது. குதிரை தின்னாது. கழுதை தின்னாது' என்றான்.

அப்போது கங்காபுத்ரன் நகைத்துக்கொண்டு:- 'சிங்கம் புலி நம்மைத் தின்னுமென்றால், நாம் வேட்டையாடி அவற்றைத் தின்பது நியாயமென்று விளையாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம். சிங்கம் புலிகளை வேட்டையாடித் தின்போர் யாரையுங் காணோம். யாதொரு சூது மறியாத, எவ்வுயிருக்கும் எவ்வகைத் தீமையும் செய்யாத ஆட்டையும், மானையும், பசுவையும் மனிதன் தின்பது நியாயமா?'என்றான்.

அப்போது காசி மந்திரி ஸுதாமன் சொல்லுகிறான்:-