பக்கம் எண் :

கலைகள் - பலாப்பழம்

நெல்லிக்காய் மூட்டையைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. நெல்லிக்காய் கொடுத்தால் எல்லோரும் வாங்கித் தின்கிறார்கள். ஆனால், ஹிந்துக்கள் நெல்லிக்காய் மூட்டை போலென்று சொல்வோனைக் கண்டால் எல்லோரும் கைகொட்டிச் சிரிப்பார்கள். இந்து தேசம் ஒரு தேவலோகத்துப் பலாப்பழத்தைப் போலாகி விட்டது. இனியென்றும் அழியாத பலாப்பழம். ஒவ்வொரு ஆர்யனும் அதில் முளைத்தவன். நாம் எல்லோரும் சேர்ந்து அந்தப் பலாப்பழத்தின் மேல் தோல். உள்ளே ஞானச்சுளை, நமக்கு அழிவில்லை. நமக்குள்ளே பிரிவில்லை. நாமொன்று. நாம் எப்போதும் தெய்வத்தை நம்புகிறோம். தெய்வத்தை நம்பி நாம் அறத்தைச் செய்தால், நம்முடைய யோக க்ஷேமங்களை தெய்வம் ஆதரிக்குமென்று பகவத்கீதை சொல்லுகிறது.