(வண்டிக்கார மெட்டு) 1. கால் துட்டுக்குக் கடலை வாங்கிக் காலை நீட்டித் தின்கையிலே என்னை யவன் கூப்பிட்டே இழுத் தடித்தான் சந்தையிலே, "தண்டை சிலம்பு சல சலென வாடி தங்கம், தண்டை சிலம்பு சல சலென" " 2. சந்தையிலே மருக் கொழுந்து சரம் சரமாய் விற்கையிலே எங்களிடம் காசில்லாமல் எங்கோ முகம் வாடிப் போச்சே! "தண்டை சிலம்பு சல சலென; வாடி தங்கம், தண்டை சிலம்பு சல சலென." கொட்டையன் இங்ஙனம் ஆட்டத்துடன் பாடி முடித்தவுடனே, ஜமீன்தார் "சபாஷ்" என்று சொல்லி, "இன்னுமொரு பாட்டுப் பாடு, கொட்டையா" என்றார். கொட்டையன் தொடங்கிவிட்டான்:- (பாட்டு) "காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம், கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம் "எப்போ எப்போ கலியாணம்?" காடு விளைய விட்டுக் கண்டாங்கி நெய்ய விட்டுக் கொக்குச் சமைய விட்டுக் குழைய லிட்டே தாலிகட்டிக் "காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்; கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்." இதைக் கேட்டு ஜமீன்தார் "சபாஷ்" என்று சொல்லிக் கொட்டையனை நோக்கி, "இன்னுமொரு பாட்டுப் பாடு" என்றார். கொட்டையன் உடனே ஆட்டமும் பாட்டுந் தொடங்கி விட்டான்:- |