பக்கம் எண் :

கலைகள் - கவி

ஸ்ரீீ விநயகுமார ஸர்க்கார் என்ற சரித்திராசிரியர் சொல்லுகிறார்:-

"கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலே ஹிந்து ஜாதியில் மகத்தான ஞானக்கிளர்ச்சி யொன்று தோன்றிற்று. அது தொடங்கிய சில வருஷங்களில் சீன தேசத்திலே பெரிய ராஜ்யங்களும் பெரிய சாஸ்திரப் பயிற்சிகளும் விளங்கி நின்றன.அக்காலத்தில் சீனத்திலே பரவிய அக்கிளர்ச்சியே அடுத்த நூற்றாண்டில் ஜப்பான், அரேபியா, துருக்கிஸ்தானம் என்ற நாடுகளில் பெருகிச் சென்றது. ஜப்பானில் ஒளி மிகுந்த "நரா"வின் காலம் (கி.பி. 710-94); அதுவே பாக்டாட் பட்டணத்தில் ஹருள் அல்ரஷீது ராஜ்யம் நடத்தியதும். அந்த கிளர்ச்சிக்காலத்திலேதான் பாரத தேசத்திலே காளிதாஸன் பிறந்தான். ஆசியா கண்டத்திலே புதிய ஒளி பிறந்தது."

உண்மையான கவிதை, அருமையான திரவியம். அதனால் உலகம் க்ஷேமத்தை அடைகிறது. எந்த நாட்டிலே புதிய மஹாகவி தோன்றுகிறானோ, அந்த நாடு மஹாபாக்யமுடையது. தமிழ் நாட்டிலே கவிதையின் புகழ் ஏறுக.