(உ) ராஜ்ய சாஸ்திரம் ஜனங்களுக்குள்ளே ஸமாதானத்தைப்பாதுகாப்பதும், வெளி நாடுகளிலிருந்து படை எடுத்துவருவோரைத் தடுப்பதும் மாத்திரமே ராஜாங்கத்தின்காரியங்கள் என்று நினைத்துவிடக்கூடாது.ஜனங்களுக்குள்ளே செல்வமும், உணவு, வாஸம்முதலிய ஸௌகர்யங்களும், கல்வியும், தெய்வ பக்தியும்,ஆரோக்கியமும், நல்லொழுக்கமும், பொது சந்தோஷமும் மேன்மேலும் விருத்தியடைவதற்குரிய உபாயங்களைஇடைவிடாமல் அனுஷ்டித்துக் கொண்டிருப்பதேராஜாங்கத்தின் கடமையாவது. குடிகள் ராஜாங்கத்தைத் தம்முடையநன்மைக்காகவே சமைக்கப்பட்ட கருவியென்று நன்றாகத்தெரிந்துகொள்ள வேண்டும். குடிகளுடைய இஷ்டப்படியேராஜ்யம் நடத்தப் படவேண்டும். தீர்வை விதித்தல், தீர்வைப் பணத்தை பல துறைகளிலே வினியோகித்தல், புதுச்சட்டங்கள் சமைத்தல், பழைய சட்டங்களை அழித்தல்முதலிய ராஜாங்கக் காரியங்களெல்லாம் குடிகளால்நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளின் இஷ்டப்படியே நடத்தவேண்டும். குடிகளின் நன்மைக்காகவே அரசு ஏற்பட்டிருப்பதால், அந்த அரசியலைச் சீர்திருத்தும் விஷயத்தில் குடிகளெல்லாரும் தத்தமக்கு இஷ்டமானஅபிப்பிராயங்களை வெளியிடும் உரிமை இவர்களுக்கு உண்டு.இந்த விஷயங்களை யெல்லாம் உபாத்தியாயர்கள்மாணாக்கர்களுக்குக் கற்பிக்குமிடத்தே, இப்போதுபூமண்டலத்தில் இயல்பெறும் முக்கியமான ராஜாங்கங்கள் "எவ்வளவு தூரம் மேற்கண்ட கடமைகளைச் செலுத்தி வருகின்றனஎன்பதையும் எடுத்துரைக்க வேண்டும். மேலும், உலகத்துராஜாங்கங்களில் சுவேச்சா ராஜ்யம், ஜனப்பிரதிநிதியாட்சி,குடியரசு முதலியன எவையென்பதையும், எந்த நாடுகளில் மேற்படி முறைகள் எங்ஙனம் மிசிரமாகி நடைபெறுகின்றன என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டும். கிராம பரிபாலனம், கிராம சுத்தி, வைத்தியம் முதலியவற்றில் குடிகளனைவரும் மிகுந்த சிரத்தை காட்டவேண்டுமாதலால், மாணாக்கர்களுக்கு இவற்றின் விவரங்கள் நன்றாக போதிக்கப்பட வேண்டும். கோயிற் பரிபாலனமும் அங்ஙனமே. ஏழைகளுக்குவீடு கட்டிக் கொடுப்பதும், தொழில் ஏற்படுத்திக்கொடுத்து உணவுதருவதும், ராஜாங்கத்தாரின் கடமை என்பது மட்டுமன்றி, கிராமத்துஜனங்கள் அத்தனை பேருக்கும் பொதுக்கடமையாகும். |