(ஊ) பொருள் நூல் பொருள் நூலைப்பற்றிய ஆரம்பக் கருத்துக்களைமாணாக்கர்களுக்கு போதிக்குமிடையே, தீர்வை விஷயத்தைமுக்கியமாகக் கவனிக்கவேண்டும். ஜனங்களிடம் தீர்வைஎத்தனைக் கெத்தனை குறைவாக வசூல் செய்யப்படுகிறதோ,அங்ஙனம் குறைவாக வாங்கும் தீர்வையிலிருந்து பொதுநன்மைக்குரிய காரியங்கள் எத்தனைக் கெத்தனை மிகுதியாக நடைபெறுகின்றனவோ, அத்தனைக் கத்தனைஅந்த ராஜாங்கம் நீடித்து நிற்கும்; அந்த ஜனங்கள் க்ஷேமமாகவாழ்ந்திருப்பார்கள். வியாபார விஷயத்தில், கூட்டுவியாபாரத்தால் விளையும் நன்மைகளை மாணாக்கர்களுக்குஎடுத்துக்காட்டவேண்டும். மிகவும் ஸரஸமான இடத்தில்விலைக்கு வாங்கி, மிகவும் லாபகரமான சந்தையில் கொண்டுபோய் விற்கவேண்டும் என்ற பழைய வியாபாரக் கொள்கையைஎப்போதும் பிராமணமாகக் கொள்ளக்கூடாது. விளைபொருளும்,செய் பொருளும் மிஞ்சிக் கிடக்கும் தேசத்தில் விலைக்கு வாங்கிஅவை வேண்டியிருக்கு மிடத்தில் கொண்டு போய் விற்கவேண்டும் என்பதே வியாபாரத்தில் பிரமாணமான கொள்கையாகும். வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ஙனம்சிறந்ததோ, அதுபோலவே கைத்தொழிலிலும் கூட்டுத் தொழிலேசிறப்பு வாய்ந்ததாம். முதலாளி யொருவன் கீழே பல தொழிலாளிகள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும்தொழிலாளிகள் பலர் கூடிச்செய்யும் தொழிலே அதிகநன்மையைத் தருவதாகும். செல்வம் ஒரு நாட்டில் சிலருக்கு வசப்பட்டதாய்பலர் ஏழைகளாக இருக்கும்படி செய்யும் வியாபார முறைகளைக்காட்டிலும், சாத்தியப்பட்டவரை அநேகரிடம் பொருள்பரவியிருக்கும்படி செய்யும் வியாபார முறைகள் மேன்மையாகபாராட்டத்தக்கனவாம். |