மீர்ஜா ஸமி உல்லா பேக் முன்பு மகம்மதிய ஸர்வ கலா சங்கம் ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுந்த முயற்சியில் தலைவர்களில் ஒருவராக உழைத்த மீர்ஜா ஸமி உல்லா பேக், "ஜாதி மத பேதங்களால் சிதைந்து போயிருப்பதால், பாரத தேசத்தார் மேலேஎழமாட்டார்களென்று பிறர் கூறும் அவச்சொல்லை நீங்கள் கேட்காதிருக்க வேண்டினால், மேலும் ஸ்வராஜ்யத்துக்குத் தகுதியுடையோராக உங்களைக் காட்டிக்கொள்ள விரும்பினால், தேசீயக் கல்விக்குத் துணை செய்யுங்கள். இந்தத் தருணம் தவறினால், இனி வேறு தருணம் இப்படி வாய்க்காது' என்கிறார்.தேசீயக் கல்வியும் ஸ்வராஜ்யமும் தம்முள்ளே பிரிவு செய்யத் தகாதன என்றும், இவ்விரண்டினுள் ஒன்றன் அவசியத்தை அங்கீகாரம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அரவிந்த கோஷ் சொல்லியதும் மேற்படி ஸமி உல்லா சொல்வதும் பொருத்தமாகவே காணப்படுகின்றன. எந்த வினைக்கும் காலம் ஒத்து நின்றாலொழிய அதனை நிறைவேற்றுதல் மனிதனுக்கு ஸாத்யமில்லை. விதியின் வலிமை சாலவும் பெரிது. ஆனால் "விதி இப்போது தேசீயக்கல்வி முயற்சிக்கு அநுகூலமானகாலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்ற செய்தியை மீர்ஜா ஸமி உல்லா நம் நாட்டாருக்கு நினைப்பூட்டுகிறார். 'காளயுக்தி' என்பது காலயுக்தி; அதாவது காலப் பொருத்தம். காலம் இந்த வர்ஷத் தொடக்கத்தில் எந்தப் பெருஞ் செயலுக்கும் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. பகவத் கீதையில் துர்க்காஸ்துதி முதலிய சில அம்சங்கள் சேர்த்தும், ஹம்ஸ யோகி என்பவரின் 'கீதா ரஹஸ்யம்' என்னும் உரைநூலில் கூறப்பட்டதைத் தழுவி 18அத்யாயக் கணக்கை 24 அத்யாயமாக மாற்றியும், சென்னை சுத்ததர்ம மண்டலத்தார் ஒரு புதிய பதிப்புப் போட்டிருக்கிறார்கள். இதற்கு நீதி நிபுண மணி அய்யர் ஒரு முகவுரை எழுதியிருக்கிறார். அந்த முகவுரையில் சக்தி தர்மத்தை மிகவும் உயர்த்திக் கொண்டாடுகிறார். இப்படிப்பட்ட மணி அய்யரும் ஆனி பெஸண்ட் அம்மையும் கலந்து நடத்தும் தேசீயக்கல்வி "முயற்சியில் பெண்களின் ஆதிக்யம் மேன்மேலும் ஓங்கி வளரும் என்பது சொல்லாமலே விளங்கும். மேற்பதிப்பின் முதல் ஏட்டின் முதுகுப் புறத்தின் தலைப்பில் 'ஓம் நம: ஸ்ரீ பரமர்ஷிம்யோ யோகிப்ய; (யோகிகளாகிய தலைமை முனிவரைப் போற்றுகிறோம் ஓம்) என்று அச்சிட்டு, அடியில், |